பயங்கரவாதி டேவிட் ஹெட்லி ஆபத்தான கதியில் மருத்துவமனையில் அனுமதி

சிகாகோ சிறையில் உள்ள அடைக்கப்பட்டுள்ள மும்பை தாக்குதல் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் ஆபத்தான கதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 | 

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் தாஜ் ஓட்டல் மற்றும் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் 160க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரது உண்மையான பெயர் தாவூத் சயத் கிலானி. அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  இதனையடுத்து அவர் சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஹெட்லி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், மன்னிப்பு வழங்கினால் தான்  அப்ரூவராக மாறத்தயார் எனவும் கூறினார். 

இதனிடையே, சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியை சக கைதிகள் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சிகாகோ சிறையில் டேவிட் ஹெட்லி சக கைதிகள் தாக்குதல் நடத்தியதைதொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP