பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்: பிரதமர் மோடி சூளுரை!

"பயங்கரவாதத்தை எதிர்கொள்ளவும், அதை வேரறுக்கவும் அதிபர் டிரம்ப் நம்முடன் இருக்கிறார். பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த டிரம்ப்புக்கு எழுந்து நின்று வாழ்த்து தெரிவியுங்கள். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா என்றும் ஓயாது" என அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், ஹௌடி மோடி நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடிபேசினார் .
 | 

பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்: பிரதமர் மோடி சூளுரை!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், ஹௌடி மோடி நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: "இந்தியர்களின் உற்சாகம் சிறிதும் குறையாமல் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு புதிய வரலாறு மட்டுமின்றி புதிய ரசாயன கலவையும் உருவாகியுள்ளது. அதாவது, புதிய கெமிஸ்ட்ரி உருவாகியுள்ளது. 

இங்கு பேசிய அதிபர் டிரம்ப், இந்தியர்களை புகழ்ந்து பேசினார். இந்து 130 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த மரியாதை. இங்கு ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர். இன்னும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி முன்பதிவு செய்தனர். ஆனால், இடப்பற்றாக்குறையால் பலருக்கு இங்கு இடம் கிடைக்கவில்லை. அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். 

இந்த நிகழ்ச்சிக்கு பெயர் ஹௌடி மோடி. ஆனால் நான் தனி ஆள் அல்ல. 130 கோடி இந்தியர்களின் கட்டளையை ஏற்று, அவர்களுக்கு சேவை செய்யும் சாதாரண சேவகன் நான். இங்கு நான் எப்படி இருக்கிறேன் என கேட்கிறீர்கள். நான் உட்பட, இந்தியாவில் அனைத்தும் தற்போது நன்றாக உள்ளது. 
சப் குச் அச்சா ஹை, எல்லாம் சௌக்கியம்.... இங்கு நான் என்ன பேசுகிறேன் என இங்குள்ள அமெரிக்கர்களுக்கு புரிய வாய்ப்பில்லை. 

அவர்களுக்கு நான் விளக்க விரும்புகிறேன். இது எங்கள் நாட்டின் மொழிகள். பல்வேறு கலாச்சாரம், பண்பாடு, மொழிகள் இருப்பினும், நாங்கள் அனைவரும் இந்தியர்களே. எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், இந்தியர்கள் என்பதில் ஒற்றுமை அடைகிறோம். 

2019ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஜனநாயகம் மீண்டும் நிரூபணம் ஆனது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட இரு மடங்கு வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார். இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பினரும், ஓட்டளித்தனர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 ஆண்டுகளை முடித்த அரசு முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டது.
இந்த அதிசயம் மோடியால் நிகழ்ந்ததல்ல, இந்திய மக்களால் நடந்தது. இன்று இந்தியாவின் மிகப்பெரிய மந்திரம், எல்லாருடனும், எல்லோரின் வளர்ச்சி. 

புதிய இந்தியாவை உருவாக்குவதே தற்போதைய அரசின் மூச்சாக உள்ளது. நமக்கு நாமே சவால் விடுத்து, நம்மை நாமே மாற்றிக்கொண்டு வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் நாம் அடைந்த வளர்ச்சியும், நாம் படைத்த சாதனையையும் வேறு யாரும் கற்பனை கூட செய்துபார்க்க முடியாது. 

15 கோடி மாதர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கி கணக்கின் மூலம், கோடிக்கணக்கானவர்களுக்கு வங்கி பரிவர்த்தனைக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில், தொழில் துவங்க விதிகள் எவ்வளவு தளர்த்தப்பட்டுளள்தோ, எளிதாக வாழவும் வழிமுறை செய்யப்பட்டுள்ளது. 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டு, 99 சதவீத கிராமங்கள் தூமையாகியுள்ளன. 

இந்தியாவில், 1 ஜிபி டேட்டா, உலகின் பிற நாடுகளை விட 30 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கிறது. பாஸ்போர்ட் சேவை, விசா சேவை, கம்பெனிக்கான உரிமம் வழங்குதல், வருமான வரி செலுத்தும் முறை, பிற வரிகள் செலுத்தும் முறை எளிமை படுத்தப்பட்டுள்ளது. 
மார்ச் 31 ஒரே நாளில், 50 லட்சம் பேர், தங்கள் வருமான வரி கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்துள்ளனர். இது இந்த அரசின் சாதனை என சொல்வதை விட வேறு என்ன சொல்ல முடியும். புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக சில நடைமுறைகளுக்கு விடை கொடுத்துவிட்டோம். 

வரும், அக்டோபர் 2ல், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில், தூய்மை இந்தியா திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டதின் பலனை கண்கூட காணும். பல வரி விதிப்பு முறை முடிவுக்கு வந்து, ஜிஎஸ்டி எனும் ஒரே வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

3.5 லட்சம் போலி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆர்டிகிள் 370க்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தை ராஜயசபாவில் நிறைவேற்ற எங்கள் கட்சிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத போதும், இரு அவைகளிலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தியாவின் இந்த நடவடிக்கை சில நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவர்களால் தங்கள் நாட்டு பிரச்னையையே தீர்க்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தையே அவர்கள் அரசியலாக வைத்துள்ளனர். அவர்களை பற்றி இந்த உலகமே அறியும்.

பயங்கரவாதத்தை எதிர்கொள்ளவும், அதை வேரறுக்கவும் அதிபர் டிரம்ப் நம்முடன் இருக்கிறார். பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த டிரம்ப்புக்கு எழுந்து நின்று வாழ்த்து தெரிவியுங்கள். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா என்றும் ஓயாது. தற்போதைய பொருளாதார வளர்ச்சி போல் இதற்கு முன் எந்த ஒரு அரசாங்கமும் இந்தியாவில் வளர்ச்சியை தந்ததில்லை " இவ்வாறு அவர் பேசினார். 

newstm.in
 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP