பயங்கரவாத பிரச்னை: மோடியுடன் ட்ரம்ப் ஆலோசனை!

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது இருவரும் பரஸ்பரம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
 | 

பயங்கரவாத பிரச்னை: மோடியுடன் ட்ரம்ப் ஆலோசனை!

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர்  நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இருவரும் தொலைபேசியில் பரஸ்பரம் ஆங்கில  புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இரு தலைவர்களுக்கும் இடையே நேற்றிரவு நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாக இருவரும் தெரிவித்தனர். இந்தியாவுக்கும். அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு உறவு நிகழாண்டில் மேலும் பலப்பட வேண்டுமென அப்போது ட்ரம்ப் விருப்பம்  தெரிவித்தார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், ஆப்கானிஸ்தான் பிரச்னை உள்ளிட்டவை குறித்தும் இருதலைவர்களும் தொலைபேசியில் கலந்துரையாடினர்.

ஆப்கானிஸ்தானில் பொது நூலகம் கட்ட  மத்திய அரசு நிதியுதவி அளித்து வருவது தொடர்பாக, பிரதமர் மோடியை, ட்ரம்ப்  கிண்டல் செய்யும் விதத்தில் அண்மையில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP