மெக்சிகோ பட்டாசு ஆலையில் கொடூரம்; 19 பேர் பலி!

மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் அடுத்தடுத்த ஏற்பட்ட வெடிவிபத்துக்களில், காவல்துறையினர் தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
 | 

மெக்சிகோ பட்டாசு ஆலையில் கொடூரம்; 19 பேர் பலி!

மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிவிபத்துக்களில், காவல்துறையினர் தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். 

மெக்சிகோ நாட்டில் பட்டாசு உற்பத்திக்கு பேர்போன டுல்டிபெக் நகரில் உள்ள ஒரு சிறிய பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களை காப்பாற்ற போலீசாரும் தீயணைப்புப் படை வீரர்களும் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் ஆலை மீண்டும் வெடித்தது. தீயை அணைக்கவும் மீட்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தவர்கள் இதில் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர். 40 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறந்தவர்களில் காவல்துறையினரும், தீயணைப்புப் படை வீரர்களும் அடங்குவர். பலர் வீரர்கள் காயமடைந்துள்ளனர். மெக்சிகோ அதிபர் என்ரிக்கே பேனா நியெட்டோ இறந்தவர்கள் இந்த சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP