இலங்கையில் பதற்றம்; சமூக வலைதளங்கள் முடக்கம்

இலங்கையில் புத்த மதத்தவர்களுக்கும், இஸ்லாமிய சமூகத்தினருக்கும் இடையே எழுந்த வன்முறையால் முக்கிய பகுதிகளில் 2வது நாளாக இன்றும் பதற்றம் நிலவுகிறது.
 | 

கலவரங்களுக்கு நடுவே இரண்டு பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், புத்த கோவில் ஒன்று தாக்கப்பட்டதாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து இன்று மீண்டும் கண்டியில் வன்முறை வெடித்தது. தனது கடையை கலவரக்காரர்கள் தாக்கியதை பார்த்து மாரடைப்பில் ஒருவர் இறந்ததாக கூறப்படுகிறது.

மற்றொருவர், மசூதியை தாக்க சென்றபோது இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதற்கு இடையே, கலவரங்கள் மற்ற ஊர்களுக்கு பரவிவிடக்கூடாது என்பதால் சமூக வலைதளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP