வியட்நாமை நோக்கி நகரும் டெம்பின் புயல்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் தாக்கிய 'டெம்பின்' புயலால் 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
 | 

வியட்நாமை நோக்கி நகரும் டெம்பின் புயல்!


வியட்நாமின் தெற்கு பகுதியை அச்சுறுத்தி வந்த டெம்பின் வெப்பமண்டல புயல், அடுத்து வரும் 48 மணி நேரங்களுக்குள் வலுவிழந்து விடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் தாக்கிய டெம்பின்' புயலால் 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் தேசம் அடைந்துள்ளது. தாழ்வான பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது, வியட்நாமின் ஹோ-சி-மின் நகரை நோக்கி நகர்வதாகவும், இதனால் மணிக்கு சுமார் 93 கிலோமீட்டர்கள் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 62,000 மீனவர்களுக்கு, கடலுக்கு செல்லக் வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் எச்சரிக்கையை தொடர்ந்து வியட்நாமில் சுமார் 70,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் .

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP