பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் சிரிய பெண்கள் - அதிர்ச்சித் தகவல்!

சேவ் சிரியா, சிரியா ஈஸ் ப்ளிடிங்க் இதுவே தற்போதைய சமூகவளைதளவாசிகளின் கூக்குரல்.. சிரியா குறித்து வெளிவரும் செய்திகளுக்கும், புகைப்படங்களுக்கும் பரிதாப முடியுமே தவிர யுத்தத்தை அடக்கவோ, தவிப்போருக்கு உதவவோ முடியாது.
 | 

பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் சிரிய பெண்கள் - அதிர்ச்சித் தகவல்!

பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் சிரிய பெண்கள் - அதிர்ச்சித் தகவல்!

சேவ் சிரியா, சிரியா ஈஸ் ப்ளிடிங்க், சேவ் சிரிய சில்ட்ரன்ஸ், ப்ரே ஃபார் சிரியா இதுவே தற்போதைய சமூகவளைதளவாசிகளின் கூக்குரல்... சிரியா குறித்து வெளிவரும் செய்திகளுக்கும், புகைப்படங்களுக்கும் பரிதாப பட முடியுமே தவிர யுத்தத்தை அடக்கவோ, தவிப்போருக்கு உதவவோ முடியாது. சிரிய கிளர்ச்சியாளர்களிடம் பெரியோர்கள் மட்டுமின்றி இளம் பிஞ்சுகளும் நசுக்கப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் போருக்கு மத்தியில் அந்நாட்டு பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன. 

சொந்த மண்ணில் வாழவும் முடியாமல் அகதிகளாக வெளியேறவும் முடியாமல் வீழ்ந்து கொண்டிருக்கும் சிரிய நாட்டு பெண்களுக்கு செல்லும் இடம் எங்கும் பிரச்னையே. யுத்த களத்தில் பயணிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட சென்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களும் தன்னால் முடிந்த அளவுக்கு சிரிய பெண்களுக்கு இன்னல்களை அளித்து வருவதாக அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. நிவாரண உதவி வேண்டும் என்றால், அதற்கு நிகராக பாலியலில் அவர்கள் தாராளமாக நடந்துகொள்ள வேண்டுமாம். அதிலும், இளம் பெண்கள், சிறுமிகளை தற்காலிகமாக திருமணம் செய்துகொள்ளும் அவலமும் நடக்கிறதாம். குறுகிய காலத்திற்கு, பாலியல் தேவைக்காக மட்டுமே இந்த திருமணம் நடக்கின்றனவாம்.

இந்த தகவலை ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் (United Nations Population Fund) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. ‘சிரியாவின் குரல்’ என்ற தலைப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, விதவைகள், விவாகரத்து செய்த பெண்கள், முகாம்களில் இருக்கும் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சில பெண்கள் ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் உள்நாட்டு அதிகாரிகளால் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போருக்கு மத்தியில் களங்கிய மனநிலையில் இருக்கும் பெண்கள் ஆண் ஆதிக்கத்தில் சிக்கி தவிக்கும் நிலை ஒவ்வொரு போரின் போதிலும் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டு இதுபோன்ற இன்னல்களை சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது ஐ.நா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக எச்சரித்தது, ஆனால் இச்சம்பவங்கள் இப்போதும் தொடர் கதையாக உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குழந்தைகள் மட்டுமின்றி, அப்பாவி பெண்களும் சிரிய யுத்தத்தில் தாக்கப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 

மிகப்பெரிய அளவில் சிரிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில், ஒரு சில இடங்களில் தவறுகள் நடந்திருக்கலாம். இருப்பினும் தவறு நடப்பதை, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்த முடியாது என்று தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP