போரால் சிதைந்த கிழக்கு கூட்டாவுக்கு திரும்பும் சிரிய மக்கள்

கிளர்ச்சியாளர்கள் கூட்டாவிலிருந்து வெளியேறிய நிலையில், அங்கு 40,000 க்கும் அதிகமான மக்கள் திரும்புள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
 | 

போரால் சிதைந்த கிழக்கு கூட்டாவுக்கு திரும்பும் சிரிய மக்கள்

போரால் சிதைந்த கிழக்கு கூட்டாவுக்கு திரும்பும் சிரிய மக்கள்கிளர்ச்சியாளர்கள் கூட்டாவிலிருந்து வெளியேறிய நிலையில், அங்கு 40,000 க்கும் அதிகமான மக்கள் திரும்பியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

சிரியாவில் அதிபர் பஷார் அல் சாத்துக்கு எதிராக போரில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரஷ்யா பெறும் உதவிகளை சிரிய அரசுப் படைக்கு செய்து வந்தது. 

கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் சண்டையிட்டு வந்த நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ நிறுத்திக் கொண்டது. இதனால், அரசுப்படையினர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அதிபர் ஆதரவு படைகளும் ரஷ்யாவும் இணைந்து கிழக்கு கூட்டாவை கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கத் தாக்குதல் நடத்தினர். 

இதன் காரணமாக கிளர்ச்சியாளர்கள் கும்பல், அங்கிருந்து வெளியேறினர்.  கடந்த 24 மணி நேரத்தில் 1123 கிளர்ச்சியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் டொயுமா நகரத்திலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

போரால் சிதைந்த கிழக்கு கூட்டாவுக்கு திரும்பும் சிரிய மக்கள்

இந்த நிலையில் சிரிய அரசு, தலைநகர் டமாஸ்கஸில் போரை நிறுத்தி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் மக்களுக்கு உறுதியளித்தது. இதன் விளைவாக சுமார் 40,000 க்கும் அதிகமான அதன் பூர்வக் குடிமக்கள், கிழக்கு கூட்டா பகுதிக்கு திரும்பியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP