சிரியா போர் கொடுமைகள்: கண்ணீர் விட வைக்கும் சிறுமியின் பாடல்!- வைரல் வீடியோ

சிரியாவின் நிலையை விளக்கும் பார்வையற்ற சிறுமியின் உருக்கமான பாடல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
 | 

சிரியாவில் அரசு தரப்பிற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது.  

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் மோதல் வலுத்துவரும் நிலையில், சிரிய வான் எல்லைக்குள் நுழையும் அமெரிக்க உளவு விமானங்களை ஸ்தம்பிக்க வைக்கும் கருவிகளை ரஷ்யா அமைத்துள்ளதாக ஐரோப்பிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே மாட்டிக்கொண்டு சிரிய பெண்கள், குழந்தைகள் என பலரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

சிரியா போர் கொடுமைகள்: கண்ணீர் விட வைக்கும் சிறுமியின் பாடல்!- வைரல் வீடியோ

இந்நிலையில் அன்சம் என்ற பார்வையற்ற 10 வயது சிறுமி, சுமார் 40 குழந்தைகளுடன் இணைந்து பாடும் காட்சி வெளியாகியுள்ளது. ஏழு ஆண்டுகளாக உள் நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் நிலை குறித்து அங்குள்ள இடிந்த கட்டடங்களில், சிதிலமடைந்த வீதிகளில் பாடி வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டுள்ளது. பிற குழந்தைகளும் அன்சமுடன் இணைந்து பாடும் இந்தப் பாடலை யுனிசெப் தயாரித்துள்ளது. குழந்தைகளின் பிரச்னை உலக மக்களுக்கு கேட்கவேண்டும், பயத்தைப் போக்கி சிரியாவில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற பின்னணியில் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. எங்கள் வாழ்க்கை மீண்டும் வசந்தமாக வேண்டும், மீண்டும் மகிழ்ச்சியான எங்கள் குழந்தை பருவம் திரும்ப வேண்டும் என உருக்கமான இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP