சிரியா ரசாயன தாக்குதல்: ஐ.நா. சபையில் அமெரிக்கா - ரஷ்யா வாய் சாடல்!

சிரியா மீதான ரசாயன தாக்குதல் சம்பந்தமாக ஐ.நா. பொது சபையில் நடந்த விசாரணையின்போது அமெரிக்காவும் ரஷ்யாவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டன.
 | 

சிரியா ரசாயன தாக்குதல்: ஐ.நா. சபையில் அமெரிக்கா - ரஷ்யா வாய் சாடல்!

சிரியா ரசாயன தாக்குதல்: ஐ.நா. சபையில் அமெரிக்கா - ரஷ்யா வாய் சாடல்!சிரியா மீதான ரசாயன தாக்குதல் சம்பந்தமாக ஐ.நா. பொது சபையில் நடந்த விசாரணையின்போது அமெரிக்காவும் ரஷ்யாவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டன.

சிரியாவில் கிழக்கு கவுட்டா நகரை கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து மீட்கும் உச்சகட்டப் போரில் அந்நாட்டின் விமானப்படைகள் சில வாரங்களாக தாக்குதலில் ஈடுபட்டது. 

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் சிரியாவின் டவுமா நகரில் 70க்கும் அதிகமான மக்கள் ரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டனர் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.  

சிரியா - ரஷ்யா ரசாயன இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டை மறுக்கின்றன. இதற்கு பல்வேறு தரப்புகளும் கண்டனங்களை எழுப்பிய நிலையில், அமெரிக்கா சிரியா, ரஷ்யா, ஈரான் அதே மாதிரியான எதிர்வினையை சந்திக்கும் என எச்சரித்தது. 

இதற்கான விசாரணை ஐ.நா பாதுகாப்பு சபையில் நேற்று நடைபெற்றது.  அதில், சிரியா மீதான ரசாயன தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்காவும் ரஷ்யாவும் ஐ.நா பாதுகாப்பு சபையில் வார்த்தை போரில் ஈடுப்பட்டன. சிரியா டூமா மீது ரசாயன தாக்குதல் தொடுக்கப்பட்டது என்பது உண்மை அல்ல என்றும், அதற்கு அமெரிக்கா காட்டும் ராணுவ எதிர்வினைக்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யாவின் ஐ.நா. பிரதிநிதி வசிலி நபியென்சியா கூறினார். 

சிரியா ரசாயன தாக்குதல்: ஐ.நா. சபையில் அமெரிக்கா - ரஷ்யா வாய் சாடல்!

இதனை எதிர்த்து, அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, சிரியா ராணுவத்துக்கு உதவும் ரஷ்யாவின் கரங்களில் சிரியா குழந்தைகளின் ரத்தம் படிந்துள்ளது என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP