சிரியா: கிளர்ச்சியாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் 23 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து நடத்திய தாக்குதலில் 7 பொதுமக்கள் உட்பட 23 பேர் பலியாகி உள்ளனர்.
 | 

சிரியா: கிளர்ச்சியாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் 23 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து நடத்திய தாக்குதலில் 7 பொதுமக்கள் உட்பட 23 பேர் பலியாகி உள்ளனர்.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள நகரங்களை மீட்க சிரியா ராணுவம் முயன்று வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தங்களது தாக்குதலை சிரியா ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக 2017-ம் ஆண்டு கிளர்ச்சியாளர் வசம் இருந்த பல நகரங்கள் மற்றும் கிராமங்களை ராணுவம் மீட்டது.

பெரும்பான்மையான இடங்கள் ராணுவம் வசம் சென்று விட்ட நிலையில் தற்போது இட்லிப் நகரம் கிளர்ச்சியாளர்களுக்கு மிக முக்கியமான அடைக்கல நகரமாக உள்ளது. பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழு அந்நகரில் இருப்பதால் அவர்கள் இடையேயான மோதலும் அடிக்கடி நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் தலைமை அலுவலகத்தை குறி வைத்து கார் குண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் உட்பட 23 பேர் பலியாகினர். பலரின் அடையாளம் இன்னும் தெரியாததால் பலியான கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. இந்த தாக்குதலை நடத்தியது யார் என தெரியவில்லை. தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP