பாகிஸ்தான் அமைச்சர் பேச.... சார்க் மாநாட்டிலிருந்து வெளியேறிய சுஷ்மா!

நியூயார்க்கில் நடந்து வரும் சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷி பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 | 

சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷி பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூடான் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு எனப்படும் சார்க் மாநாட்டின் 73வது கூட்டம் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.  இதில் இந்த நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், ''ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் பிராந்திய ஒத்துழைப்பும், சமூக அமைதியும், பாதுகாப்பும் முக்கியம். இதனை வேரறுக்க நினைக்கும் பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் ஆதரவை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்'' என்று அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷி பேசத் தொடங்கினார். அப்போது உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

இதனைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், ''பிராந்திய ஒத்துழைப்பு குறித்து பேசிய சுஷ்மா பாதியிலேயே வெளியேறினால், அது குறித்து எப்படி முடிவு எடுப்பது. அதைப்பற்றி பேச தான், உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இங்கு பங்கேற்றுள்ளனர். ஆனால் ஒரு நாட்டின் அணுகுமுறையால் 'சார்க்' அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது" என்றார்

இதே போல, சுஷ்மாவு ஸ்வராஜுக்கு முன்னதாகவே, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டனர். 

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு வேறு சில முக்கிய அலுவல்கள் இருந்ததால்தான் அவர் பேசி முடித்தவுடன் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. அவர் வெளியேறிய போதிலும் மாநாட்டில் துறை செயலர் விஜய் கோஹ்லே மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பங்கேற்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP