ட்ரம்ப்பின் இஸ்லாமிய நாடுகள் பயணத் தடைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த, பயணத் தடை நடவடிக்கைக்கு, அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
 | 

ட்ரம்ப்பின் இஸ்லாமிய நாடுகள் பயணத் தடைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த, பயணத் தடை நடவடிக்கைக்கு, அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவர் எடுத்த பல்வேறு சர்ச்சைக்குரிய முடிவுகளில் முக்கியமானது, இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட சில நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் யாரும் நுழைய கூடாது என்பது தான். இஸ்லாமியர்கள் அதிகம் வருவதால் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதாக ட்ரம்ப் கூறினார். ஆனால், அந்த முடிவு நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்டது. மதரீதியாக யாரையும் நாட்டுக்குள் அனுமதிக்க தடை விதிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டின. 

பின்னர் இந்த உத்தரவை ட்ரம்ப் அரசு மாற்றி புதிய தடையை கொண்டு வந்தது. அதுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. 3 முறை இதுபோல மாற்றியமைத்த பிறகு, கடைசியாக கொண்டு வந்த பயண தடையையும் கீழ் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டில், 9 நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச், 5-4 என்ற ஓட்டுகள் வாரியாக பிரிந்து, பயண தடையை அனுமதித்து உத்தரவிட்டன. இந்த தடை உத்தரவை தொடர்ந்து, ஈரான், லிபியா சோமாலியா, சிரியா ஏமன் ஆகிய நாடுகளின் பெரும்பாலான மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது. 

பயண தடைக்கு ஆதரவாக தீர்ப்பளித்த 5 நீதிபதிகளும், ட்ரம்ப்பின் குடியரசு கட்சியின் அதிபர்களால் பணியமர்த்தப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP