சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்ட்ரா! தடைவிதிக்கிறது பிரிட்டன்

குளிர்பானங்கள் அருந்துவதற்காக பயன்படும் ஸ்டார்ஸ்(STRAWS) எனும் பிளாஸ்டிக் குழாய்கள் பிரிட்டனில் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 | 

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்ட்ரா! தடைவிதிக்கிறது பிரிட்டன்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்ட்ரா! தடைவிதிக்கிறது பிரிட்டன்

குளிர்பானங்கள் அருந்துவதற்காக பயன்படும் ஸ்ட்ரா (STRAWS) எனும் பிளாஸ்டிக் குழாய்கள் பிரிட்டனில் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் ஸ்ட்ராஸ் பயன்படுத்தப்படுவதாக கடல் பாதுகாப்பு சங்கம் அண்மையில் தெரிவித்துள்ளது. மேலும் கடற்கரையோரங்களில் அகற்றப்படும் கழிவுப்பொருட்களில் ஸ்ட்ராஸ் அதிகமாக காணப்படுவதாகவும் கூறியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்ட்ரா! தடைவிதிக்கிறது பிரிட்டன்

இவற்றை விலங்குகள், குறிப்பாக கடல்வாழ் உயிரினங்கள் உட்கொண்டு மரணத்தை தழுவுவதாகவும், பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, நாட்டின் சுற்றுசூழல் நலன் கருதி ஸ்ட்ராக்களை தடை செய்ய அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மெல்லிய பிளாஸ்டிக் ஸ்ட்ரா மக்குவதற்கு சுமார் 500 வருடங்கள் வரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 850 கோடி அளவுக்கு ஸ்ட்ரா சேர்ந்தால் எதிர்காலத்தில் கடற்கரை பகுதி முழுவதும் ஸ்ட்ராவாகத்தான் காணப்படும். எனவே 2019ம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக பிளாஸ்டிக் குழாய்களின் பயன்பாடு இல்லாத பிரிட்டனை அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பிரிட்டனில் 850 கோடி ஸ்ட்ரா என்றால், பிளாஸ்டிக் பற்றி விழிப்புணர்வே இல்லாத இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எத்தனை கோடி ஸ்ட்ரா பயன்படுத்தப்படும்? சுற்றுச்சூழலை பாதுகாக்க பிரிட்டன் மட்டுமல்ல... ஒட்டுமொத்த உலகமே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP