இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் மேலும் பல தாக்குதல்களை நடத்துவதற்கு தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டு வருகின்றன என்று இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 தாக்குதல்கள் தற்கொலைகுண்டு தாக்குதல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அது தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் அவர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் தங்களது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையில் மேலும் பல தாக்குதல்களை நடத்துவதற்கு தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டு வருகின்றன என்று இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அரசு விடுத்துள்ள அந்த எச்சரிக்கை குறிப்பில், தீவிரவாதிகள், சுற்றுலா தலங்கள், போக்குவரத்து நிலையங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP