தீபாவளிக்கு சிறப்பு தபால் தலை - ஐ.நா

இந்தியாவில் கொண்டாடப் படும் தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதனை இந்தியாவும் பாராட்டி, வரவேற்றுள்ளது.
 | 

தீபாவளிக்கு சிறப்பு தபால் தலை - ஐ.நா

இந்தியாவில் கொண்டாடப் படும் தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி இந்த வருடத்தின் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா. சபை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதம் 19-ம் தேதி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதனை இந்தியாவும் வரவேற்றுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் கனடா தீபாவளிக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது. 

newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP