நாடாளுமன்றத்தில் உரையாற்றக் கூடாது: ட்ரம்புக்கு சபாநாயகர் உத்தரவு!

அரசுத் துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும்வரை நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு, சபாநாயகர் நான்சி பொலோசி உத்தரவிட்டுள்ளார்.
 | 

நாடாளுமன்றத்தில் உரையாற்றக் கூடாது: ட்ரம்புக்கு சபாநாயகர் உத்தரவு!

அரசுத் துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும்வரை நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு, சபாநாயகர் நான்சி பொலோசி உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், அமெரிக்க நாடாளுமன்ற  கூட்டுக் கூட்டத்தில் அதிபர் உரை நிகழ்த்துவது மரபு. இந்த ஆண்டுக்கான உரையை வரும் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தவுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

ஆனால், அரசுத் துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முன்பு, நாடாளுமன்ற ஆண்டு கூட்டத்தில் அதிபர் பேசக் கூடாது என்றும், அவ்வாறு அவர் பேசினால் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது எனவும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, அரசு துறை முடக்கப்பட்டுள்ள விவகாரம் முடிவுக்கு வரும்வரை தாம் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதில்லை என முடிவு செய்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க, மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பும் திட்டத்துக்கான நிதி ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றம் அளிக்கவில்லை. இதையடுத்து அரசுத் துறைகள் முடக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

கடந்த 33 நாள்களாக நீடிக்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக அமெரிக்காவில் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP