விண்வெளிப் படை உருவாக்கம்: சீனா, ரஷ்யாவுடன் விரோதத்தை வளர்க்கிறதா அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பாதுகாப்புக்காக விண்வெளிப் படையை உருவாக்க திட்டமிட்டு உள்ளார். ட்ரம்ப்பின் விண்வெளி படை அறிவிப்பு தெற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனா, ரஷ்ய மேலாதிக்கத்திற்கான போட்டியாக பார்க்க்ப்படுகிறது.
 | 

விண்வெளிப் படை உருவாக்கம்: சீனா, ரஷ்யாவுடன் விரோதத்தை வளர்க்கிறதா அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பாதுகாப்பிற்காக விண்வெளிப் படையை உருவாக்க திட்டமிட்டு உள்ளார். ட்ரம்ப்பின் விண்வெளி படை அறிவிப்பு தெற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனா, ரஷ்ய மேலாதிக்கத்திற்கான போட்டியாக பார்க்க்ப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தில் ஸ்பேஸ் ஃபோர்ஸ் எனப்படும் விண் வெளிப்படையை உருவாக்கும் திட்டம் வேகமெடுத்து வருவது குறித்த செய்திகள் கடந்த வாரம் வெளியாகின. இதற்கு ஆட்கள் சேர்க்கும் பணி விரைவில்  ஆரம்பிக்க உள்ளதாம்.

அமெரிக்க விமான படையில் தற்போது 5 படைகள் இருக்கிறது. தரை படை, விமான படை, 2 கடற்படை, ஒரு கடலோரக் காவல்படை ஆகியவை இருக்கிறது.
இந்த படைகள் மட்டும் இல்லாமல் இதனுடனோடு ஆறாவதாக ஸ்பேஸ் ஃபோர்ஸ் எனப்படும் விண்வெளி படை உருவாக்கப்படுகிறது. 

இதற்கான திட்டம் எல்லாம் தயார் நிலையில் இருப்பதாகவும் அனுமதிக்கு மட்டும் காத்து இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். பல எதிர்ப்புகளையும் மீறி பணிக்கு ஆள் எடுக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இன்னும் சில நாட்களில் இதற்கான பணிகள் துவங்கும் என்றுக் கூறப்படுகிறது. ஏற்கனவே விமான படையிலும், ராணுவத்திலும் அனுபவம் பெற்று, ஸ்பேஸ் போர்ஸில் சேர விரும்பும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

மற்ற படைகளை போலவே இதற்கு மிகவும் பயிற்சி அளித்து ஆட்களை எடுக்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தேசித்துள்ளது.  கூடுதலாக வித்தியாசமான தொழில்நுட்ப பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படும். இவர்களுக்காக புதிய ஆயுதங்கள் உருவாக்க வேண்டும், புதிய தொழில்நுட்பம் மூலம் இந்த மொத்த படையும் வடிவமைக்கப்படும். 

பூமியில் சூப்பர் பவர் நாடாக இருக்கும் அமெரிக்கா விண்வெளியிலும் சூப்பர் பவர் நாடாக திகழவே விண்வெளி படையை உருவாக்குவதன் காரணம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். 

மேலும், தன் பெரிய திட்டங்களை வைத்துக் கொண்டு இதை உருவாக்கியதாகவும், உலக நாடுகள், தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் சிறந்து விளங்குகிறது. அவர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் விண்வெளியில் பிரச்சனை செய்யலாம். விண்வெளியை பிடிக்க போர் நடக்கலாம். எங்காவது ஒரு கிரகத்தில் புதிய உயிரினம் நம்மீது போர் தொடுக்க கூட வரலாம். இதை தடுக்கத்தான் இந்த விண்வெளி படையை உருவாக்க இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

தெற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் ரஷ்ய மற்றும் சீனாவை காட்டிலும் நிரூபித்துக்கொள்ளவே அமெரிக்கா இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதாக கூறப்படுகிறது.  இதற்கு ரஷ்ய தரப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா விண்வெளியிலும் ஆயுதக் குப்பை போடப் போவதாக விமர்சித்தது.

அதே போல, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமாக பென்டகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செனட் சபை உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்தத் திட்டம் கைவிடப்படும் என்றும் கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP