என் தவறுக்கு வருந்துகிறேன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மார்க் வாக்குமூலம்

ஃபேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்த விவகாரத்தில் பொறுப்புகளை நிறைவேற்றாத தவறுக்கு வருந்துகிறேன் என மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
 | 

என் தவறுக்கு வருந்துகிறேன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மார்க் வாக்குமூலம்

என் தவறுக்கு வருந்துகிறேன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மார்க் வாக்குமூலம்

ஃபேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்த விவகாரத்தில் பொறுப்புகளை நிறைவேற்றாத தவறுக்கு வருந்துகிறேன் என மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வழியாக பயனாளிகளின் தரவுகள் அனைத்தும் லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்தினால் திருடப்பட்டதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.

இதன் மூலம் மோடி ஆப், காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் யுக்திகள் வகுத்து தந்தது, அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேலைகள், இதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்கள் களவாடப்பட்டது என அடுக்கடுக்காக ஃபேஸ்புக் நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் ஓவ்வொரு தினமும் வெளிவந்து சர்வதேச சந்தையையுமே புரட்டிப்போட்டது.  இது தொடர்பாக ஏற்கெனவே மார்க் ஜூக்கர்பெர்க்  மன்னிப்புக் கோரினார். 

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முன்னர் இன்றும் நாளையும் (ஏப்ரல் 10,11) பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜுக்கர்பக் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்.

இதற்கிடையில், நேற்று சில உறுப்பினர்களை சந்தித்த மார்க் ஜுக்கர்பர்க் விசாரணை குழுவினரிடம் எழுத்துமூலமாக தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அவரது வாக்குமூலம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

"எனது கல்லூரிப் பருவத்தில் நான் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை தொடங்கினேன். நான்தான் அதை இப்போதும் நடத்துகிறேன். சுமார் 200 கோடி மக்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களுடன் தங்களது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். இங்கு எது நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பேற்றாக வேண்டும்.

பொய் செய்திகள், தேர்தல்களில் பிறநாடுகளின் தலையீடு, வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகள் போன்ற தீமைகளும் எங்களது சமூகவலைத்தளத்தில் பரவுவதை தடுக்கும் வகையில் போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவில்லை என்பது தற்போது தெளிவாக புரிகிறது.

எங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாக தொலைநோக்குப் பார்வையை செலுத்தாமல் போனது மிகப்பெரிய தவறு. என்னுடைய இந்த தவறுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்ததாக அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP