விரைவில் டிரம்ப் - கிம் ஜாங் ஊன் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஊனை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
 | 

விரைவில் டிரம்ப் - கிம் ஜாங் ஊன் சந்திப்பு!

விரைவில் டிரம்ப் - கிம் ஜாங் ஊன் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஊனை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். 

இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டு பகை நிலவி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தவுள்ளதாக கிம் ஜாங் ஊன் கூறி வந்தார். தொடர்ந்து, அணு குண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ராக்கெட் சோதனைகளையும் வடகொரியா நடத்தி வந்தது. சர்வதேச நாடுகளின் கண்டனங்கள் மற்றும், பொருளாதார தடைகளையும் மீறி இதுபோன்ற நடவடிக்கைகளில் வடகொரிய அரசு ஈடுபட்டு வந்தது.

ஆனால்,  கடந்த மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ள வடகொரியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்வினால் தென் கொரியாவுடன் இணக்கமான உறவை வடகொரியா ஏற்படுத்தியது. அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வடகொரிய அரசை தென் கொரியா வலியுறுத்தியது. 

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த, அணு ஆயுத பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள வடகொரியா முன்வந்ததாக  கூறப்பட்டது. அமெரிக்க - வடகொரிய உச்சி மாநாடு விரைவில் நடைபெறும் என்றும் அதில் அதிபர் கிம் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் வெளியானது. இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்,  வடகொரியா உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். அதிபர் கிம் ஜாங் ஊனை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு வடகொரியா தயாராக உள்ளதாக தென் கொரியா கூறினாலும், இன்னும் வடகொரியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. டிரம்ப்பின் அறிக்கையை தொடர்ந்து, வடகொரியாவில் இருந்து அறிக்கை வெளியாகும் என கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP