கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை
 | 

கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை


மறைந்த கியூபா நாட்டின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன், ஃபிடல் காஸ்ட்ரோ டியாஸ்- பலார்ட், தற்கொலை செய்துகொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான டியாஸ்- பலார்ட், முன்னாள் சோவியத் யூனியனில் பயிற்சி பெற்று, அணுசக்தி விஞ்ஞானியாக கியூபா அரசில் பணியாற்றி வந்தார். 68 வயதான நிலையில், பல மாதங்களாக மன அழுத்தத்திற்காக மருத்துவர்களிடம் அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர் நேற்று தற்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

கல்வியாளராகவும், விஞ்ஞானியாகவும் அறியப்பட்ட அவர், கியூபா அரசின் அறிவியல் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். அதேபோல, உலகம் முழுக்க பல்வேறு அறிவியல் மற்றும் கல்வி நிகழ்ச்சிகளில் கியூபாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

கடந்த 2016ம் ஆண்டு, தனது 91வது வயதில் கியூபாவின் மிகப்பெரிய தலைவர் என போற்றப்படும் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP