வீட்டிற்குள் பாம்புக்கூட்டம்.. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்.. வைராலாகும் வீடியோ!

அமெரிக்காவில் ஒருவருடைய வீட்டின் அடியில் 45 கொடிய விஷமுள்ள பாம்புகள் இருந்ததால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
 | 

வீட்டிற்குள் பாம்புக்கூட்டம்.. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்.. வைராலாகும் வீடியோ!

அமெரிக்காவில் ஒருவருடைய வீட்டின் அடியில் 45 கொடிய விஷமுள்ள பாம்புகள் இருந்ததால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

அமெரிக்காவின் டெக்ஸாசில் அமைந்துள்ள அல்பனி பகுதியைச் சேர்ந்த நபர், தன்னுடைய வீட்டின் அடிப்பகுதியில் உள்ள அறையில் மின்கம்பிகளை பரிசோதிக்க சென்று உள்ளார். சரிவர பராமரிப்பு இல்லாத அந்த அறையில் சில பாம்புகள் நடமாடியதை கண்டார். 

உடனடியாக பாம்பு பிடிக்கும் மையத்துக்கு தொடர்பு கொண்டு கூறினார்.அவர்கள் வந்து அங்கிருந்த 45 பாம்புகளை பிடித்துள்ளனர். பிடிபட்ட பாம்புகள் அனைத்தும் கொடிய விஷம் கொண்டவை என்பதை அறிந்ததும் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் அறையில் பாம்புகள் நடமாட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP