பள்ளியில் துப்பாக்கிச் சூடு; வேடிக்கை பார்த்த போலீஸ் அதிகாரி

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது, அந்த பள்ளிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி, உள்ளே செல்லாமல் வெளியே நின்று வேடிக்கை பார்த்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 | 

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இந்த மாதம் 15ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்காவில் பரவலாக இருந்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பள்ளி துப்பாக்கிச் சூடுகள் மற்றும் பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி வன்முறைகளால், அந்நாட்டு அரசு, ஒவ்வொரு பள்ளி இருக்கும் வட்டத்திற்கும் ஒரு பிரத்யேக காவல்துறை அதிகாரியை பாதுகாப்புக்காக நியமித்திருந்தது. இந்நிலையில், சம்பவம் நடந்த பார்க்லேண்ட் பள்ளிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு அதிகாரி, உள்ளே துப்பாக்கிச் சூடு நடந்த போது, வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடப்பது தெரிந்தவுடன், அவர் உள்ளே செல்லாமல், பள்ளி வளாகத்திற்கு வெளியே மறைந்து நின்று கொண்டிருந்தார். குற்றவாளி வெளியே வரும்போது அவனை பிடிக்க அவர் திட்டமிட்டதுங்க தெரிகிறது. 

சம்பவங்கள் நடந்த 6 நிமிடங்களுக்குள் அவர் உள்ளே சென்றிருந்தால் சில  மாணவர்களையாவது காப்பாற்றியிருக்கலாம் என அந்த பகுதியின் மூத்த காவல்துறை அதிகாரி ஸ்காட் இஸ்ரேல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பீட்டர்சன் என்ற அந்த காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பின், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று தனது வேலையே பீட்டர்சன் ராஜினாமா செய்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP