டீ விற்று ரூ.200 கோடி சம்பாதித்த அமெரிக்கப் பெண்மணி

நம்மில் நிறைய பேருக்கு, டீ என்பது வெறும் பானம் மட்டுமல்ல. மகிழ்ச்சி, துக்கம், அமைதி என வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் நம்முடன் சேர்ந்து பயணிக்கும் ஒரு உணர்வு அது. இப்படித்தான் நம்ம ஊர் தேநீரில் மனதை பறிக்கொடுத்த அமெரிக்கப் பெண்மணி ஒருவர், டீ விற்பதைத் தொழிலாக செய்து தற்போது 200 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளார்.
 | 

டீ விற்று ரூ.200 கோடி சம்பாதித்த அமெரிக்கப் பெண்மணி

டீ விற்று ரூ.200 கோடி சம்பாதித்த அமெரிக்கப் பெண்மணி

நம்மில் நிறைய பேருக்கு, டீ என்பது வெறும் பானம் மட்டுமல்ல. மகிழ்ச்சி, துக்கம், அமைதி என வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் நம்முடன் சேர்ந்து பயணிக்கும் ஒரு உணர்வு அது. இப்படித்தான் நம்ம ஊர் தேநீரில் மனதை பறிக்கொடுத்த அமெரிக்கப் பெண்மணி ஒருவர், டீ விற்பதைத் தொழிலாக செய்து தற்போது 227 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளார். 

அமெரிக்காவின் கொலராடாவை சேர்ந்தவர் புரூக் எடி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், 2002 ல் தெற்காசிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்தியாவிற்கும் வருகைப் புரிந்திருந்தார். அப்போது அவர் தேநீரை சுவைத்தார். அந்த சுவை அவரை தேநீருக்கு அடிமையாக்கியது. 

டீ விற்று ரூ.200 கோடி சம்பாதித்த அமெரிக்கப் பெண்மணி

கொலரடா நகரில் ஏராளமான காபி கடைகள் உள்ளன. அங்கு சென்று அவர் தேநீர் சுவைத்த போதும், இந்தியாவில் கிடைத்த சுவை அவருக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து, 2006 முதல், தானே வீட்டில் தேநீர் தயாரித்து, பக்தி சாய் (Bhakti Chai) என்ற பெயர் வைத்து, தனது காரில் பின் பகுதியில் வைத்து பகுதி நேரமாக விற்பனை செய்ய துவங்கினார். இஞ்சி மற்றும் மசாலா சேர்த்து அவர் தயாரித்த தேநீருக்கு பலர் வாடிக்கையாளர்களாக மாறினர். இதனையடுத்து, எடி தயாரித்த தேநீர் பல காபி கடைகளில் விற்பனையானது.

மேலும், 2007 முதல் இணையதளம் மூலமும் விற்பனை துவங்கினார். வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, சிங்கிள் பேரன்டான எடி முழுநேர வேலையை விட்டுவிட்டு, தேநீர் விற்பனையில் முழு கவனம் செலுத்தினார். விதவிதமான டீயை அறிமுகம் செய்தார். இன்று அவரது பிசினஸ் சக்கைபோடுபோடுகிறது.

எடி புரூக்கின் கடும் உழைப்பு காரணமாக, அமெரிக்காவின் தொழில்முனைவோர் பத்திரிகையின், சிறந்த தொழில்முனைவோர் பட்டியலில் 5வது இடத்திற்குள் வந்திருக்கிறார். கடந்த ஆண்டு இவரது நிறுவனத்தின் வருவாய் 227 கோடி ரூபாய். இந்த ஆண்டு அது, 455 கோடி ரூபாயாக இருக்கு என எதிர்பார்ப்பதாக பக்தி சாய் நிறுவனம் கூறியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP