அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அசிங்கமாக திட்டிய மாணவி

அமெரிக்க பள்ளி துப்பாக்கிச் சூடு: அதிபர் டிரம்ப்பை அசிங்கமாக திட்டிய மாணவி
 | 

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அசிங்கமாக திட்டிய மாணவி


ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின், இதுகுறித்து ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருத்தம் தெரிவித்தார். ஆனால், அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், டிரம்ப்பை அசிங்கமாக திட்டி தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்நாட்டில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் இருப்பதால், துப்பாக்கி கலாச்சாரம் மேலோங்கி உள்ளது. இதன் காரணமாக, அடிக்கடி எதிர்பாராத விதமாக சிறுவர், குழந்தைகள் கையில் ஆயுதங்கள் கிடைத்து, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுகின்றன. சாதாரண துப்பாக்கிகள் போக, வினாடிக்கு பல குண்டுகளை சுடும் அசால்ட் ரைபிள் துப்பாக்கிகளும் பொதுமக்கள் பயன்படுத்தும்படி, விற்கப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி போன்ற பொது இடங்களில் பலர் கொத்து கொத்தாக கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம், துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க, அசால்ட் ரைபிள்களை தடை செய்ய, மனநிலை சரியில்லாதவர்கள் துப்பாக்கி பெற தடை செய்வது போன்ற சட்டங்களை விதிக்க வலியுறுத்தப்படும். ஆனால், ஆளும்கட்சியான குடியரசு கட்சியின் தலைவர்கள், அதற்கு முட்டுக்கட்டை போட்டு விடுவார்கள். அதிபர் டிரம்ப் உட்பட அக்கட்சியை சேர்ந்த பலரும், துப்பாக்கிகள் மீது எந்தவித தடையும் போடக் கூடாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு, மீண்டும் அசால்ட் ரைபிள் துப்பாக்கிகளை சாமானியர்களுக்கு விற்க கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் மீண்டும் டிரம்ப் கட்சியினர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். தனது ட்விட்டர் கணக்கில் டிரம்ப் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து, அவர்களுக்காக பிரார்த்தனைகள் செய்வதாக கூறியிருந்தார். 

அதற்கு துப்பாக்கிச் சூடு நடந்த ப்ளோரிடா பள்ளி மாணவி ஒருவர் பதில் எழுதினார். அதில், டிரம்ப்பை அசிங்கமாக திட்டி, "என் சக மாணவர்களும், ஆசிரியர்களும் பலியாகியுள்ளார்கள். பிரார்த்தனைகள் அனுப்புவதை தவிர வேறு ஏதாவது செய்யுங்கள். பிரார்த்தனைகள் மட்டும் யாரையும் காப்பாற்றப்போவதில்லை. துப்பாக்கிகள் மீது கட்டுப்பாடு கொண்டு வாருங்கள்" என எழுதினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP