விமானத்தில் செக்ஸ் தொல்லை: வாலிபருக்கு 9 ஆண்டு சிறை

விமானப் பயணத்தின்போது சக பெண் பயணியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த குற்றத்துக்காக, இந்தியாவைச் சேர்ந்த வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

விமானத்தில் செக்ஸ் தொல்லை: வாலிபருக்கு 9 ஆண்டு சிறை

விமானப் பயணத்தின்போது சக பெண் பயணியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த குற்றத்துக்காக, இந்தியாவைச் சேர்ந்த வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பணி நிமித்தமாக அமெரிக்காவில் வசித்து வரும் பிரபு  ராமமூர்த்தி (34) என்பவர், கடந்த  ஜனவரி மாதம் 3 -ஆம் தேதி, லாஸ் வேகாஸ் நகரிலிருந்து டெட்ராய்ட் நகருக்கு, தனது மனைவியுடன் விமான பயணம் மேற்கொண்டார். அப்போது, தனது பக்கத்தில் அமர்ந்த இளம்பெண் (22) உறங்கி  கொண்டிருந்த வேளையில், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய அவர் முயற்சித்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த டெட்ராய்ட் நகர நீதிமன்றம், பிரபு ராமமூர்த்திக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அவர் உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும், இனி ஒருபோதும் அவர் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP