சொகுசு ஹோட்டலாக மாறும் சதாம் உசேன் கப்பல்!

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு சொந்தமான ஆடம்பர சொகுசு கப்பல் அதிநவீன ஹோட்டலாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

சதாம் உசேனுக்காக 30 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட “பாஸ்ராஹ் ப்ரீஸ்” சொகுசு படகு, கடற்படையினருக்கான லக்ஸரி ஹோட்டலாக மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 

சொகுசு ஹோட்டலாக மாறும் சதாம் உசேன் கப்பல்!

இ‌ந்தக் கப்பலில் சதாம் தங்குவதற்காக தனி அறைகள், உணவுக் கூடங்கள், படுக்கை அறைகள், விருந்தினர்கள் ஓய்வெடுப்பதற்காக 17 சிறு அறைகள், கப்பல் சிப்பந்திகளுக்காக 18 அறைகள், மருந்தகம் போன்றவை உள்ளன. பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் கூடிய இந்த கப்பல் கடந்த 1981 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

சொகுசு ஹோட்டலாக மாறும் சதாம் உசேன் கப்பல்!

தற்போது ஈராக்கின் ‌பாஸ்ரா ‌துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கப்பலை எப்படி பயன்படுத்துவது என ஈராக் அரசு ஆலோசித்து வந்தது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கப்பலை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இதைத் தொடர்ந்து அந்த கப்பலை ஹோட்டலாக மாற்ற ஈராக் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கப்பல் கேப்டன்களும், சிப்பந்திகளும் இந்த கப்பலில் தங்கி ஓய்வெடுக்க முடியும் என ஈராக் அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP