ரஷ்யாவின் உளவாளியா ட்ரம்ப்? - எஃப்.பி.ஐ நடத்திய ரகசிய விசாரணை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நெருக்கமான பலர், ரஷ்யாவுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்த நிலையில், ரஷ்யாவுக்காக ட்ரம்ப் வேலை செய்து வந்தாரா, என அமெரிக்க உளவுத் துறை விசாரணை நடத்தியது அம்பலமாகியுள்ளது.
 | 

ரஷ்யாவின் உளவாளியா ட்ரம்ப்? - எஃப்.பி.ஐ நடத்திய ரகசிய விசாரணை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நெருக்கமான பலர், ரஷ்யாவுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்த நிலையில், ரஷ்யாவுக்காக ட்ரம்ப் வேலை செய்து வந்தாரா, என அமெரிக்க உளவுத் துறை விசாரணை நடத்தியது அம்பலமாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தேர்தலின்போது ரஷ்யாவின் உதவியுடன் வெற்றி பெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டன. இது தொடர்பாக சிறப்பு கமிட்டி ஒன்று விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், முன்னாள் எஃப்.பி.ஐ தலைவர் ஜேம்ஸ் கோமியை கடந்த 2017ம் ஆண்டு பணியை விட்டு ட்ரம்ப் நீக்கினார். அதன் பின்னர் ரஷ்யாவுக்கும் தனக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து, கோமி விசாரித்து வந்ததாலேயே அவரை பணியை விட்டு நீக்கியதாக ட்ரம்ப் தெரிவித்தார். இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதுவரை ட்ரம்ப்புக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே இதில் குற்றச்சாட்டப்பட்ட நிலையில், தற்போது ரஷ்யாவுடனே ட்ரம்ப் நேரடியாக ரகசிய தொடர்பில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த சமயம் அமெரிக்க உளவுத்துறை, ரஷ்யாவுக்கும் ட்ரம்புக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும், உண்மையிலேயே ட்ரம்ப் ரஷ்யாவுக்காக வேலை செய்து வருகிறாரா, என்ற ரீதியில் விசாரணை நடத்தியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, ட்ர்மப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவர் பால் மேனபோர்ட், என ட்ரம்புக்கு நெருக்கமான பலர், ரஷ்யாவுடன் தொடர்பு வைத்திருந்தாக குற்றம்சாட்டப்பட்டு அப்ரூவராகவும் மாறியுள்ளனர். இந்த நிலையில் இது ட்ரம்ப்புக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP