அமெரிக்காவில் உளவு பார்த்தாக ரஷ்ய பெண் கைது 

ரஷ்ய அரசின் உளவாளியாக செயல்படும் நோக்கத்தோடு சதித் திட்டம் தீட்டி அமெரிக்க அரசியல் குழுக்களில் ஊடுருவயதாக ரஷ்ய பெண் வாஷிங்கடனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

அமெரிக்காவில் உளவு பார்த்தாக ரஷ்ய பெண் கைது 

ரஷ்ய அரசின் உளவாளியாக செயல்படும் நோக்கத்தோடு சதித் திட்டம் தீட்டி அமெரிக்க அரசியல் குழுக்களில் ஊடுருவயதாக ரஷ்ய பெண் வாஷிங்கடனில் கைது செய்யப்பட்டுள்ளார். 

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மரியா புட்டினா (29) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்களின் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்த பின்னர் இந்தத் தகவலை அமெரிக்க அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 

இவர், ஆளும் குடியரசு கட்சியினருடன் நெருக்கமான தொடர்புகளை வளர்த்ததுடன், துப்பாக்கி சார்ந்த உரிமைகளுக்கான வழக்கறிஞராக செயல்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வப்போது விருந்து உபச்சரிப்புகளுடன் அந்தக் கட்சியினருடன் நெருக்கமாக ஊடுருவ முயற்சித்துள்ளார் என குற்றம்சாட்டப்பட்டது. 

அமெரிக்க உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்ட இவர், 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் ரகசியமாக சந்திப்பதற்கான  முயற்சியை மேற்கொண்டதாக ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார். 

ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவாளிகள் செயல்பட்டதாக விசாரணை ஆணையக் குழு ஆராய்ந்து வரும் நிலையில் உளவு விவகாரத்தில் ரஷ்யா மீண்டும் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP