அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: விட்டேகரை கொண்டு விசாரணையை முடக்குவாரா ட்ரம்ப்?

2016 அதிபர் தேர்தலில் ட்ரம்பின் பிரசார குழுவுடன் ரஷ்யாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு பொறுப்பு அட்டார்னி ஜெனரலாக உள்ள விட்டேகர் விமர்சனம் செய்தது குறித்து தனக்கு தெரியாது என ட்ரம்ப் கூறியுள்ளார்.
 | 

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: விட்டேகரை கொண்டு விசாரணையை முடக்குவாரா ட்ரம்ப்?

2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ட்ரம்பின் தேர்தல் பிரசார குழுவுடன் ரஷ்யாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மல்லர் விசாரித்து வருவதை தற்போதைய பொறுப்பு அட்டார்னி ஜெனரலாக உள்ள மேத்யூ விட்டேகர் விமர்சனம் செய்தது குறித்து தனக்கு தெரியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். 

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசாரணையை மல்லர் விசாரித்து வருகிறார். ஆனால் ரஷ்ய தலையீட்டை ட்ரம்ப் மறுத்து வருகிறார். இதனை அவர் சூனிய வேட்டை என்றும் விமர்ச்த்து வருகிறார். இதனிடையே நடந்து முடிந்த தேர்தலைத் தொடர்ந்து அட்டர்ணி ஜெனிரல் ஜெஃப் ஷென்ஸை வலுக்கட்டாயமாக பதவி விலக வைத்து, அவருக்கு பதில் மாத்யூ விட்டேகரை பணியமர்த்திய ஒரு வாரத்துக்கு பிறகு ட்விட்டரில் மல்லர் ஒரு "குழப்பவாதி'' என்றும், இந்த விசாரணை "முழுக்க கேளியானது" என்றும் இந்த நீண்டகால "விசாரணையில் ஈடுபட்டிருப்பவர்கள் தேசத்துக்கு ஒரு அவமானம்" என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். ட்ரம்பின் விமர்சனம் என்பது அட்டார்னி ஜெனரல் விட்டேகரைக் கொண்டு விசாரணையை முடக்கும் நோக்கமாக இருக்கலாம் என்று எதிர்க் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். 

அதே போல அட்டார்னி ஜெனரலாக தற்போது உள்ள விட்டேகர், ஏற்கெனவே மல்லரை விமர்ச்த்தவர். மேலும், தற்போது முல்லரின் விசாரணையை முடிக்கச் சொல்லும் அதிகாரமும் அவரை பணியிலிருந்து நீக்கும் அதிகாரமும் விட்டேகருக்கு உள்ளது என்பதால் இந்த சந்தேகம் வலுபெற்றுள்ளது. 

இத்தகைய விமர்சனங்களை அடுத்து, மல்லரின் ரஷ்ய தலையீட்டு விசாரணை குறித்த விட்டேகரின் விமர்சனம் குறித்து தனக்கு தெரியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த வெள்ளிகிழமை பத்திரிகையாளர்களிடம் பேசிய ட்ரம்ப் இந்த விசாரணை நடைபெற்றிருக்கவே கூடாது என்றும், அதனால் மில்லியன் கணக்கான பணம் வீணாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு?

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலாரிக்கு எதிராக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சைபர் தாக்குதல்கள், சமூக வலைதளங்களில் போலி செய்திகளை ரஷ்யா வெளியிட்டது என அமெரிக்க உளவுத்துறை முகமைகள் தெரிவித்திருந்தது.

இந்த நடவடிக்கையில் ட்ரம்பின் அணியை சேர்ந்தவர்கள் இருந்தனரா என்பதை மல்லரின் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. ட்ரம்ப் தேர்தல் குழுவின் மூத்த அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளை சந்தித்தனர் என தெரியவந்துள்ளது. ஆனால் முதலில் அது வெளிப்படையாக கூறப்படவில்லை.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP