அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து ரஷ்யா - அமெரிக்கா பேசித்தீர்க்கும்: ஐ.நா. நம்பிக்கை

ஐ.என்.எப். விவகாரத்தில் உள்ள பிரச்னைகளை அமெரிக்காவும், ரஷ்யாவும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் குட்ரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ரஷ்ய விரைந்துள்ளார்.
 | 

அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து ரஷ்யா - அமெரிக்கா பேசித்தீர்க்கும்: ஐ.நா. நம்பிக்கை

ஐ.என்.எப். அணுஆயுத ஒப்பந்த விவகாரத்தில் உள்ள பிரச்னைகளை அமெரிக்காவும், ரஷ்யாவும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டானியோ குட்ரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ரஷ்யா - அமெரிக்கா இடையிலான நடுத்தர தூர அணுஆயுத ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு  மேற்கொள்ளப்பட்டது.  அந்த ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா செயல்படுவதால், இதிலிருந்து  அமெரிக்கா விலகிக்கொள்ள உள்ளதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ந் தேதி அறிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவு ஆயுதப்போட்டிக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச அளவில் கருத்து எழுந்துள்ளது.. 

இந்த நிலையில் இந்தப் பிரச்சினையை அமெரிக்காவும், ரஷ்யாவும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டானியோ குட்ரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், ''ஐ.என்.எப். ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா கூறி உள்ள கருத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் அறிந்துள்ளார். இந்தக் கருத்து வேறுபாடுகளை இரு நாடுகளும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்'' என்று குறிப்பிட்டார்.

இதனிடையே அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். அங்கு இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP