ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: அமெரிக்க வெளியுறவு செயலாளர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 | 

ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: அமெரிக்க வெளியுறவு செயலாளர்

ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: அமெரிக்க வெளியுறவு செயலாளர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேற்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். 

ட்ரம்ப் அரசில் தொடர்ந்து நீக்கப்பட்டு வரும் மூத்த அதிகாரிகள் பட்டியலில் டில்லர்சன்னும் சேர்ந்துள்ளார். ட்ரம்ப் அவரை நீக்கியது டில்லர்சனுக்கே கடைசி நிமிடம் வரை தெரியாது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா குறுக்கிட்டதாக அமெரிக்க உளவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. அதைத் தடுக்க ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் புதிய சட்டத்தை இயற்றியது. ஆனால், தடைகளை ட்ரம்ப் நடைமுறைக்குக் கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வருகிறார். 

இந்த ஆண்டு அமெரிக்காவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் ரஷ்யா குறுக்கிட்டு வாக்காளர்கள் பட்டியலை ஹேக் செய்யக்கூடும் என உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆனால், ரஷ்யாவுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க ட்ரம்ப் அரசு தயங்கி வருகிறது.

நேற்று பணி நீக்கம் செய்யப்பட்ட வெளியுறவுத்துறை செயலாளர் டில்லர்சன் கூறுகையில், "ரஷ்யாவின் செயல்கள் வருத்தமளிக்கிறது. அவற்றைத் தடுக்கப் போதிய நடவடிக்கைகளை நாம் எடுக்கவில்லை. ரஷ்யா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் நாட்டுக்கும், தங்கள் மக்களுக்கும் இதுபோன்ற செயல்கள் எந்த அளவு உதவும் என யோசித்துப் பார்க்க வேண்டும். சர்வதேச அரங்கில் இருந்து தன்னை ரஷ்யா தனிமை படுத்திக் கொள்வது, அந்நாட்டு மக்களுக்கு நல்லது அல்ல" என்றும் டில்லர்சன் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP