பாகிஸ்தானுக்கு ரூ.12,600 கோடி நிதி கட்: அமெரிக்கா அதிரடி

பாகிஸ்தானுக்கு ரூ.12,600 கோடி நிதி கட்: அமெரிக்கா அதிரடி
 | 

பாகிஸ்தானுக்கு ரூ.12,600 கோடி நிதி கட்: அமெரிக்கா அதிரடி


தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தானை குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி நிறுத்தப்படும் என எச்சரித்தார்.

டிரம்ப்பின் அறிவிப்புக்கு பின்னர், அமெரிக்க நாடாளுமன்றமும், பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த நிதியை ரத்து செய்ய ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், நேற்று சுமார் ரூ.5,700 கோடி நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், அது கூட்டணி நாட்டுக்காக வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான நிதியுதவி மட்டும் தான் என தற்போது தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் வேறு சில பாதுகாப்பு நிதியுதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

வெளிநாட்டு ராணுவ நிதியுதவி என்ற பெயரில் கடந்த ஆண்டு வழங்கவேண்டிய சுமார் ரூ.1,600 கோடியும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுவரை நிலுவையில் உள்ள அனைத்து நிதியுதவி தொகைகளையும் அமெரிக்கா தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளது. 

தீவிரவாத கும்பல்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு சுமார் ரூ.6,000 கோடி அளவுக்கு அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக அதிபர் டிரம்ப்பின் நேரடி எச்சரிக்கைக்கு பிறகு, பாகிஸ்தான் அமெரிக்கா உறவு மிக மோசமாக உள்ளது. இதை பயன்படுத்தி, பாகிஸ்தானுடன் மேலும் நெருக்கமாக சீனா முயற்சிகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP