அமெரிக்க ஹோட்டலில் அறுசுவை செய்து அசத்தும் ரோபோ!

அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று ரோபோக்களால் இயங்கி வருகிறது.
 | 

அமெரிக்க ஹோட்டலில் அறுசுவை செய்து அசத்தும் ரோபோ!

அமெரிக்க ஹோட்டலில் அறுசுவை செய்து அசத்தும் ரோபோ!

அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று ரோபோக்களால் இயங்கி வருகிறது. 

சாக்கடை தூய்மை செய்யும் பணி முதல் பைலட் பணி வரை அனைத்து வேலைகளையும் அசால்ட்டாக செய்து அசத்திவருகிறது ரோபோக்கள். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் ரோபோக்கள் உணவு சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 

அமெரிக்க மாகாணத்தில் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் ரோபோக்கள் சுவையான உணவுகளை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி வருகிறது. இந்த ரோபோக்களின் உணவுகளுக்கு அடிமையான அமெரிக்கவாசிகள் ரோபோக்கள் காய்கறி நறுக்கும் ஸ்டைலை காணவும், இறைச்சி சமைக்கும் அழகை பார்க்கவும், ரோபோக்கள் செய்யும் சுவையான குழம்பை ரூசிக்கவும் அந்த உணவகத்திற்கு குவிகின்றனர்.  

முன்னதாக சென்னை செம்மஞ்சேரியில் உள்ள உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு தவறான உணவுகளை பரிமாறி ரோபோக்கள் சொதப்பியதால் வாடிக்கையாளரால் ஊழியர் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP