பள்ளியில் பட்டம் பெற்ற ரோபோ!

பட்டமளிப்பு விழாவில் ஐபேட் இணைக்கப்பட்ட ரோபோ கலந்து கொண்டு பட்டம் பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பள்ளியில் பட்டம் பெற்ற ரோபோ!

பள்ளியில் பட்டம் பெற்ற ரோபோ!

பட்டமளிப்பு விழாவில் ஐபேட் இணைக்கப்பட்ட ரோபோ கலந்து கொண்டு பட்டம் பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் சிந்தியா பெட்வே பகுதியில் உள்ள பள்ளி பட்டமளிப்பு விழாவில், மாணவிக்கு பதிலாக ரோபோ வந்து பட்டம் பெற்றது பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. லிபுளோர் பள்ளியில் படிக்கும் மாணவி சிந்தியா பெட்வே, பள்ளிப்படிப்பை முடித்தவர். திடீரென விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். கோமா நிலையிலேயே உள்ள மாணவியால் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருக்கு பதிலாக ஐ பேட் இணைக்கப்பட்ட ரோபோ கலந்து கொண்டது.

பள்ளியில் பட்டம் பெற்ற ரோபோ!

சிந்தியாவின் கையில் மற்றொரு ஐபேட் கொடுத்து ரோபோவுடன் இணைக்கப்பட்டிருந்தது. எனவே ரோபோ பட்டம் பெருவதை சிந்தியா மருத்துவமனையில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தார். சிந்தியாவின் பெயரை படித்தவுடன் ரோபோ மேடைக்கு சென்று பட்டத்தை வாங்கியது. பட்டமளிப்பு விழாவில் சக மாணவிகள் போல் அங்கி, தொப்பி ஆகியவற்றை அணிந்து பட்டம் பெற்றது பார்வையார்களை கவர்ந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP