ஆர்.ஜே பாலாஜி பாணியில் அதிபர் ட்ரம்புக்கு போன் செய்து கலாய்த்த காமெடியன்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்ட காமெடி நடிகர் குடியேறிகள் விவகாரம், நீதிபதி நியமனம் குறித்து விவாதித்து கலாய்த்துளார். இதற்கு ட்ரம்பும் மிகவும் சீரியஸாக விவாதித்துள்ளார்.
 | 

ஆர்.ஜே பாலாஜி பாணியில் அதிபர் ட்ரம்புக்கு போன் செய்து கலாய்த்த காமெடியன்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்ட காமெடி நடிகர் குடியேறிகள் விவகாரம், நீதிபதி நியமனம் குறித்து விவாதித்து கலாய்த்துள்ளார். இதற்கு ட்ரம்பும் மிகவும் சீரியஸாக விவாதித்து அவரை அதிகாரி என நினைத்து ஏமாந்து போயுள்ளார். 

அமெரிக்க தொலைக்காட்சி பிரபலமும் ரேடியோ ஜாக்கியுமான ஜான் மெலெண்டெஸ். இவர் காமெடி நடிகர், பலகுரல் மன்னர் என பன்முகத்தண்மை கொண்டவர். இவர் அவ்வப்போது, பிரபலங்களுக்கு போன் செய்து கலாய்த்து பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு ஜான் தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தார். அப்போது, எதிர்முனையில் அதிபர் ட்ரம்ப் மருமகன் ஜரேட் குஷ்னர் பேசியுள்ளார்.

அவரிடம், தன்னை ஜனநாயக கட்சியை சேர்ந்த நியூஜெர்சி மாகாண செனட்டர் பாப் மெலெண்டெஸ் பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டு, ட்ரம்பிடம் பேச வேண்டும் என கோரியுள்ளார். இதனை அடுத்து, ட்ரம்பிடம் தெரிவிப்பதாக ஜரேட் கூறியுள்ளார்.

சில மணி நேரம் கழித்து, அமெரிக்க அதிபருக்கான பிரத்யேக விமானத்தில் இருந்து ட்ரம்ப், ஜான் தொடர்பு கொண்ட எண்ணுக்கு திரும்பவும் அழைப்பு விடுத்துள்ளார். செனட்டர் பாப் மெலெண்டெஸிடம் பேசுவதாக நினைத்து, அவரிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து ட்ரம்ப் மிக தீவிரமாக பேசியுள்ளார்.  

கடைசிவரை செனட்டர் பேசுவதாகவே நினைத்து ட்ரம்ப் பேசும் ஆடியோ பதிவை ஜான் மெலெண்டெஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டு, தற்போது அந்த உரையாடல் வைரலாக பரவி வருகிறது.

பாப் மெலெண்டெஸ் சமீபத்தில் பரிசுப்பொருள் பெற்ற வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர் ஆவார். அதற்கு, வாழ்த்துக்களையும் ட்ரம்ப் கூறுவதாக அந்த உரையாடல் இடம்பெறுகிறது. குடியேறிகள் விவகாரம்,  புதிய நீதிபதியை நியமிப்பது என பல விவகாரங்கள் தொடர்பாக ட்ரம்ப் ஜானிடம் விவாதித்துள்ளார். 

இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, சில நேரங்களில் அதிபரின் தொடர்பு எல்லைக்குள் இது போன்ற பிரச்னைகள் வருவதுண்டு என்றனர். இதனிடையே அதிபரை ஏமாற்றியதற்காக, ஜான் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், தான் இன்னும் கைது செய்யப்படவில்லை என ஜான் மெலெண்டெஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP