தங்கச் சுரங்கத்தில் சிக்கிய சுமார் 1000 பணியாளர்கள் மீட்பு

தங்க சுரங்கத்தில் சிக்கிய சுமார் 1000 பணியாளர்கள் மீட்பு
 | 

தங்கச் சுரங்கத்தில் சிக்கிய சுமார் 1000 பணியாளர்கள் மீட்பு


தென் ஆப்பிரிக்காவின் தியுனிசன் என்ற ஊரில் உள்ள தங்கச் சுரங்கத்தில் 955 சுரங்க பணியாளர்கள் இரு தினங்களுக்கு முன் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் அனைவரும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெல்காம் நகருக்கு அருகே உள்ள  தியுனிசன் என்ற சிறிய ஊரில், பியட்ரிக்ஸ் என்ற தங்கச் சுரங்கம் உள்ளது. அந்த பகுதியை தாக்கிய கடும் சூறாவளியால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுரங்கத்தில் உள்ள மின்தூக்கிகள் வேலை செய்யாமல் போனது. இதனால், 955 சுரங்க பணியாளர்கள் கடந்த புதனன்று உள்ளே சிக்கிக் கொண்டார்கள். 

அவர்களை காப்பாற்ற கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், 30 மணி நேரத்திற்கு பிறகு அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளதாக சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடும் போராட்டத்திற்கு பிறகு, மின்சார தடங்கள் சீரமைக்கப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதன்பின், 2 மணி நேரத்தில் அனைவரையும் அங்கிருந்து மீட்டு விட்டதாக பியாட்ரிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP