அமெரிக்காவுடன் பேச்சுவா‌ர்த்தை நடத்த தயார்- மனம் மாறிய வடகொரியா

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வடகொரியா தயாராக இருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது.
 | 

அமெரிக்காவுடன் பேச்சுவா‌ர்த்தை நடத்த தயார்- மனம் மாறிய வடகொரியா

அமெரிக்காவுடன் பேச்சுவா‌ர்த்தை நடத்த தயார்- மனம் மாறிய வடகொரியாஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவ‌தற்கு வடகொரியா தயாராக இருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது. 

தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற ‌வடகொரிய ராணுவ தளபதி கிம் யோங் சோல், அந்நாட்டு அதிபர் மூன் ஜேவை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மூன் ஜேவிடம் அவ‌ர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அணு ஆயுத தயாரிப்புகளை கைவிட்டால் எந்தவொரு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் முன் வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த அழைப்பை வடகொரியா ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. நிபந்தனைகள் இல்லாத பேச்சுவார்த்தைக்கு மட்டுமே தயாராக இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP