பிரிட்டனிடம் மன்னிப்பு கேட்க தயார்: டொனால்ட் டிரம்ப்

பிரிட்டனிடம் மன்னிப்பு கேட்க தயார்: டொனால்ட் டிரம்ப்
 | 

பிரிட்டனிடம் மன்னிப்பு கேட்க தயார்: டொனால்ட் டிரம்ப்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஸ்விஸ் நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு அவர், பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சில வாரங்களுக்கு முன், பிரிட்டனில் உள்ள இனவெறி அமைப்பு ஒன்றை தான் தவறுதலாக ஆதரித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க தயார் என டிரம்ப் கூறினார்.

கடந்த நவம்பர் மாதம், பிரிட்டன் நாட்டில் உள்ள 'பிரிட்டன் ஃபர்ஸ்ட்' என்ற சர்ச்சைக்குரிய வலதுசாரி அமைப்பை சேர்ந்த தலைவர் ஒருவர், அந்நாட்டில் இஸ்லாமியர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற சில வீடியோக்களை பகிர்ந்திருந்தார். 

இதற்கு முன்னதாகவே, இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அந்த அமைப்பு தொடர்ந்து ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் நடைபெறும் இனவெறி சம்பவங்கள் பலவற்றுக்கு காரணமாக கருதப்படும் அந்த  சர்ச்சைக்குரிய அமைப்பின் தலைவர் பகிர்ந்த வீடியோக்களை டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இஸ்லாமியர்கள் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக டிரம்ப் எழுதினார். 

ஆனால்,  உண்மையில் அந்த அமைப்பு பகிர்ந்த வீடியோ, நெதர்லாந்து நாட்டில் எடுக்கப்பட்டது. அந்த விடியோவும், அது சித்தரிக்கப்பட்ட விதமும் முற்றிலும் போலி என தெரிய வந்தது. அதை பற்றி எதுவுமே தெரியாமல், டிரம்ப் அந்த வீடியோவை வைத்து இஸ்லாமியர்களை தாக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து கேட்டபோது, பிரிட்டன் பிரதமர் தெரசா மே, தங்கள் நாட்டு இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக பேசி, டிரம்ப் செய்தது தவறு என அப்போது சுட்டிக் காட்டினார். 

அதற்கு பதிலடி கொடுக்குமாறு டிரம்ப், "என்னை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் நாட்டில் வளரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை  தடுக்கும் வழியை பாருங்கள் என ட்விட்டரில் எழுதினார். 

இருவருக்கும் இடையே நடந்த சர்ச்சையை பற்றி இன்று கேட்டபோது, "பிரிட்டன் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. அந்த வீடியோக்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் எந்த அமைப்பையும் அங்கீகரிக்கவிலை. அவர்கள் இனவெறி பிடித்தவர்கள் என நீங்கள் கூறினால், அதற்கு நான் மன்னிப்பு கேட்க தயார்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP