போருக்குத் தயாராகவே உள்ளோம்: ஐ.நா.வில் ரஷ்ய பிரதிநிதி பேச்சு

அமெரிக்கா போர் தொடுத்தால் பதில் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இடையேயான உடன்படிக்கை முடிவுக்கு வந்த பின்னணியில் இந்த வார்த்தைப் போர் எழுந்துள்ளது.
 | 

போருக்குத் தயாராகவே உள்ளோம்: ஐ.நா.வில் ரஷ்ய பிரதிநிதி பேச்சு

அமெரிக்கா போர் தொடுத்தால் பதில் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை முடிவுக்கு வந்த பின்னணியில் இந்த வார்த்தைப் போர் எழுந்துள்ளது. 

கடந்த 1987-ல் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இடையே அணு ஆயுத உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதன்படி நிலத்தில் இருந்து ஏவப்படும் 500 முதல் 5,500 கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்ட அணு ஏவுகணைகளை இருநாடுகளும் பயன்படுத்தக்கூடாது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்தார்.

இந்தப் பின்னணியில் ஐ.நா. சபையில் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை துணை இயக்குநர் அண்ட்ரே பெலுசோவ், ''ரஷ்யா போருக்கு தயாராகி வருவதாக அமெரிக்கா அண்மையில் குற்றம் சாட்டியது. அது நிஜம்தான். அமெரிக்கா போர் தொடுத்தால் ரஷ்யாவும் பதிலுக்கு தயாராக உள்ளது. போர் சூழலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். 

அணுஆயுத வலிமையை அதிகரிக்கவே இருநாட்டு அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது. இதன்மூலம் உலகின் பாதுகாப்பை மிகவும் மோசமான நிலைக்கு அமெரிக்கா தள்ளியுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.'' என்று கூறினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP