பிகினியில் பாலூட்டிக் கொண்டே ரேம்ப் வாக்!- இன்ஸ்டாகிராமை கலக்கும் மாடல் அழகி

அமெரிக்க மாடல் அழகி தனது 5 குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப்படியே ரேம்ப் வாக் செய்த வீடியோ இன்ஸ்டாகிராமை கலக்கி வைரலாகி வருகிறது.
 | 

பிகினியில் பாலூட்டிக் கொண்டே ரேம்ப் வாக்!- இன்ஸ்டாகிராமை கலக்கும் மாடல் அழகி

அமெரிக்க மாடல் அழகி தனது 5 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப்படியே ரேம்ப் வாக் செய்த வீடியோ இன்ஸ்டாகிராமை கலக்கி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவைக் சேர்ந்த மாரா மார்ட்டின் ஒரு சாதாரண மாடல். ஆனால் இவர் தனது ஓரே ஒரு ராம்ப் வாக்கில், மிகப் பிரபலமாகியுள்ளார். மயாமி நகரில் நடைப்பெற்ற நீச்சல் உடைகளுக்கான ஃபேஷன் ஷோ சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் கலந்துகொண்ட மாடல் மாரா மார்ட்டின், நிகழ்ச்சிக்கு தயாராகி நடைபோட இருந்த நேரத்தில் அவரது 5 மாதக் குழந்தை பசியால் அழுதது. உடனடியாக மாரா, பசியால் அழுதுக் கொண்டிருந்த தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப்படியே பிகினி உடையில் ரேம்ப்வாக் செய்தார். அவரது குழந்தையும் பிகினி உடையில், அதிக சத்தத்தை கட்டுப்படுத்தும் ஹெட்ஃபோனை மாட்டி இருந்தது. 

இதைப்  பார்த்த விருந்தினர்கள் மற்றும் அங்கிருந்த பார்வையாளர்கள் பலரும் வியப்படைந்தனர். சிலர் அதிர்ச்சியாகவும் சிலர் மாராவின் இந்த செயலை நெகிழ்ச்சியுடனும் பார்த்தனர். இதே போல தான், மாடல் மாராவின் இந்த ரேம்ப் வாக் வீடியோ இணையத்திலும் சற்று கலவையான பின்னூட்டங்களை பெற்றிருக்கிறது.  பலர் மாராவின் செயல் துணிச்சலானது என அவரை பாராட்டும் அதே நேரத்தில் சிலர் அவரது இந்த செயல் மற்றவரை ஈர்க்கும் நோக்கம், தவறான செயல் என்றும் கடிந்து வருகின்றனர்.

இருப்பினும் ஃபேஷன் ஷோவில் தனது 5 மாத குழந்தையுடன் மாரா ரேம்ப்வாக் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகியுள்ளது. இதனால் ஃபேஷன் இதழ்களில் மாரா மார்ட்டின் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மாடல் மாரா குறிப்பிடுகையில், "நான் என் மகளுக்கு தாய்ப்பால் கொடுத்தது தலைப்புச் செய்தியாகியுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. நான் தினமும் செய்யும் வேலைக்காக என்னை பாராட்டியதை வரவேற்கிறேன்" என்று கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP