ராணி எலிசபெத் அவமதிப்பு: ட்ரம்ப்-ஐ வெளுக்கும் பிரிட்டன் நெட்டிசன்கள் 

பிரிட்டனுக்கு அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று அந்நாட்டு ராணி எலிசபெத்தை சந்தித்தார். அப்போது வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் பல நடைமுறைகளை அவர் கண்டுகொள்ளாமல், நடந்துகொண்டது விமற்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
 | 

ராணி எலிசபெத் அவமதிப்பு: ட்ரம்ப்-ஐ வெளுக்கும் பிரிட்டன் நெட்டிசன்கள் 

பிரிட்டனுக்கு அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நாட்டு ராணி எலிசபெத்தை சந்தித்தார். அப்போது வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் பல நடைமுறைகளை அவர் கண்டுகொள்ளாமல், நடந்துகொண்டது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. 

4 நாள் பயணமாக அதிபர் ஆனா பின் முதன் முதலாக பிரிட்டன் சென்ற ட்ரம்ப்புக்கு லண்டனில் நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் விரோத கொள்கைகள் கொண்ட ட்ரம்ப்புக்கு பிரிட்டனில் வரவேற்பு கிடைக்காது என்று அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். 

இந்த நிலையில் பிரிட்டன் பக்கிங்ஹம் அரண்மனை சென்ற ட்ரம்ப் நேரத்துக்கு செல்லாமல், 10 நிமிடம் தாமதமாக சென்றார். பொதுவாக ராணியை சந்திக்க வரும் அரசியல் தலைவர்கள் முன்கூட்டியே வந்து விடுவார்கள். ஆனால் ட்ரம்ப் தாமதமாக சென்றதால், ராணி 10 நிமிடம் வெயிலில் காத்திருந்து அவரை வரவேற்க வேண்டியதாய் இருந்தது. இதனால் ராணி அவதிப்பட்டதாக அந்நாட்டு மக்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர். 

தொடர்ந்து, ராணியை சந்திக்க வரும்போது முதலில் அவர்கள் தான் கைகொடுக்க வேண்டும். ஆனால் ட்ரம்ப் கை கொடுக்காத காரணத்தால், காத்திருந்து பின் ராணியே முன்வந்து கை கொடுத்தார். 

அடுத்ததாக பாதுகாப்பு படையினர் ட்ரம்புக்கு மரியாதை செலுத்தினர் அப்போது பாதுகாவலர்கள் அணிவகுத்து நிற்க, தலைவர்கள் நடந்து செல்ல வேண்டும். இதில் ராணி தான் எப்போதும் முன்னே செல்ல வேண்டும் என்பது அவர்கள் நாட்டு மரபு. ஆனால் ட்ரம்ப் எதையும் கண்டுகொள்ளாமல் ராணியை முந்திக்கொண்டு நடந்து சென்றார். இடது பக்கமாக வாருங்கள் என ராணி செய்கையால் தெரிவித்தும் அது ட்ரம்புக்கு புரியவில்லை.

சிறிது தூரம் நடந்து சென்ற ட்ரம்ப் அதன்பின்னர் தன்னை சரிசெய்துகொண்டு, சிறிது காத்திருந்து மெதுவாக நடந்து வந்த ராணிக்கு இணையாக நடந்தார்.  பொதுவாக,  மரியாதை செலுத்தும் அணிவகுப்பின்போது, ராணி நடந்து செல்லும்போது அவரது கணவர் பிலிப் ஒரு அடி பின்னே தான் நடந்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக ஒரு நாட்டுக்கு வருகையில் அந்நாட்டு நெறிமுறைகளை தெரிந்துகொண்டு வரத் தெரியாதவர் தான் அமெரிக்க அதிபரா? என பிரிட்டன் மக்கள் ட்ரம்ப்பை வறுத்தெடுத்து வருகின்றனர். முழுக்க முழுக்க எதிர்ப்புக்களாய அமைந்த பிரிட்டன் பயணத்தை முடித்துக்கொண்ட ட்ரம்ப் அங்கிருந்து தனிப்பட்ட முறையாக ஸ்காட்லாந்து சென்றார். அங்கும் அவர்க்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP