மனித உருவத்தில் நாய்க்குட்டி - வைரல் போட்டோஸ்!!

மனித முகத்தை போன்றே தோற்றம் கொண்ட நாய்க்குட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

மனித உருவத்தில் நாய்க்குட்டி - வைரல் போட்டோஸ்!!

மனித உருவத்தில் நாய்க்குட்டி - வைரல் போட்டோஸ்!!

மனித முகத்தை போன்றே தோற்றம் கொண்ட நாய்க்குட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிகோலஸ் என்ற நாய்க் குட்டியின் முகத் தோற்றம் மனித முகம் போல் இருப்பதாகக் கூறி அதன் படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முகம் முழுக்க முடியுடன் கூடிய குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த அந்த நாய்க்கு, அதன் உரிமையாளர் முடியை வெட்டியுள்ளார். கண்கள் பார்க்க மனிதனுடையது போல தெரியவே, முடியை கிட்டத்தட்ட ஒரு மனித முக சாயலுக்கு வெட்டி புகைப்படமும் எடுத்துள்ளார். 

அதை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட, லைக்ஸ் அள்ளியது. அதேநேரம், கமென்ட், ஷேர் என உலகம் முழுக்க நாயின் புகழ் பரவியது. அந்நாயின் கண்கள் பார்ப்பதற்கு மனிதர்களுடைய கண்களை போன்றே உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வாயும் அப்படித்தான் இருக்கிறது. முதலில் இதை ஃபேஸ்புக்கில் பார்த்த பலரும், போட்டோஷாப் வேலையாக இருக்கும் என கூறினர்.

மனித உருவத்தில் நாய்க்குட்டி - வைரல் போட்டோஸ்!!

இதற்கு மறுப்பு தெரிவித்த நிக்கோலஸின் உரிமையாளர் சாந்தல் டெஸ்ஜார்டின்ஸ், இது ஒன்றும் போட்டோ ஷாப் நாய் கிடையாது, எனது சொந்த நாய் என விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த டிசம்பர் மாதம் ஃபேஸ்புக்கில் தனது செல்ல நாயை பதிவேற்றம் செய்ததாகவும், அந்த போட்டோ இணையத்தில் வைரலானதாகவும் தெரிவித்துள்ளார். இது என்ன நாயா? என நிக்கோலஸ் போட்டோவிற்கு 19,000 நபர்களிடமிருந்து குழப்பமான கமெண்ட்ஸ் வந்துள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP