அதிபர் ட்ரம்ப்பின் குற்றங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கிறார் வழக்கறிஞர் கோஹன்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சொந்த விவகாரங்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், நாடாளுமன்ற விசாரணை கமிட்டியின் முன், ட்ரம்ப் செய்த குற்றங்கள் பற்றி வாக்குமூலம் அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 | 

அதிபர் ட்ரம்ப்பின் குற்றங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கிறார் வழக்கறிஞர் கோஹன்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சொந்த விவகாரங்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், நாடாளுமன்ற விசாரணை கமிட்டியின் முன், ட்ரம்ப் செய்த குற்றங்கள் பற்றி வாக்குமூலம் அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில், ட்ரம்ப்புக்கு ஆதரவாக ரஷ்ய உளவுத்துறை செயல்பட்டதாகவும், ரஷ்யாவுக்கு உதவிகரமாக, ட்ரம்ப்பின் பிரச்சாரக் குழுவில் இருந்த பல அதிகாரிகள் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பல தரப்பில் இருந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப்பின் சொந்த விவகாரங்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மீது பல்வேறு விவகாரங்களில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ட்ரம்ப்புடன் ரகசிய தொடர்பு வைத்திருந்த பெண்களுக்கு பணம் கொடுத்தது, அது தொடர்பாக, 2017ம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது, ரஷ்யா தொடர்பு குறித்து பொய் வாக்குமூலம் அளித்தது, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்த வாரம் நாடாளுமன்ற விசாரணை கமிட்டியின் முன், மூன்று முறை கோஹன் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று, நடைபெற்ற முதல் விசாரணையில், செனட் சபையின் உறுப்பினர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு கோஹன் பதிலளித்தார். இந்த விசாரணை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படாமல், ரகசியமாக நடத்தப்பட்டது.

இன்று நடைபெறும் விசாரணையில், தொலைக்காட்சிகள் முன்னிலையில், கோஹன் வாக்குமூலம் அளிப்பார். அப்போது அவர், அதிபருக்கும் தனக்கும் இருந்த நெருக்கமான உறவு, ட்ரம்ப்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்புகள், ட்ரம்ப் செய்த குற்றங்கள், ஆகியவை பற்றி வாக்குமூலம் அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், இன்று ட்ரம்ப் - ரஷ்யா விவகாரத்தில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP