அதிபர் டிரம்ப்பிடம் விசாரணை; விசேஷ கமிஷன் அதிரடி

அதிபர் டிரம்ப்பிடம் விசாரணை; விசேஷ கமிஷன் அதிரடி
 | 

அதிபர் டிரம்ப்பிடம் விசாரணை; விசேஷ கமிஷன் அதிரடி


அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவாளிகளும், ஹேக்கர்களும் பல குளறுபடிகளை செய்ததாகவும், டிரம்ப்புக்கு ஆதரவாக சதிகள் செய்ததாகவும், விசேஷ கமிட்டி ஒன்று விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் தலைவர் ராபர்ட் முல்லர், இதுவரை டிரம்ப்பின் தேர்தல் குழு தலைவர் மற்றும் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

பண மோசடி, மற்றும் தேசத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும். இந்த விசாரணை தன்னை நோக்கி நடப்பது அல்ல, என அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தாலும், டிரம்புக்கு நெருக்கமான அதிகாரிகளை, முல்லர் தொடர்ந்து விசாரித்து வருகிறார். டிரம்ப்பின் தேர்தல் குழு தலைவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட டிரம்ப்புக்கு நெருக்கமான பலர் மீது முல்லர் வழக்கு தொடுத்துள்ளார். அடுத்த கட்டமாக டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரை நோக்கி விசாரணை நடந்து வருவதாகவும், தொழிலதிபராக இருந்தபோது, அவர் பல்வேறு பண மோசடிகளை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த வாரம், டிரம்ப் நியமித்த அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸிடம் முல்லர் பல மணிநேரம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. முல்லர் தலைமையிலான விசாரணை கமிஷனை நியமித்ததே, செசன்ஸின் துணை அதிகாரி தான். அதனால், அந்த கமிஷன் தற்போது அவரையே விசாரித்து வருவது டிரம்ப்பின் அரசின் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையே, அடுத்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப்பை முல்லர் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில நாட்களில் டிரம்ப்பை முல்லர் நேருக்கு நேர் விசாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP