தப்பிக்க முயன்று உயிரை விட்ட சிறைக்கைதிகள்!

பிரேசில் நாட்டில் கைதிகள் சிறையில் இருந்து தப்பிக்க வைக்க நடந்த தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
 | 

தப்பிக்க முயன்று உயிரை விட்ட சிறைக்கைதிகள்!

தப்பிக்க முயன்று உயிரை விட்ட சிறைக்கைதிகள்!

பிரேசில் நாட்டில் கைதிகளை சிறையில் இருந்து தப்பிக்க வைக்க நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளனர். 

பிரேசில் நாட்டில் பெலேம் நகரில் உள்ள சாந்தா இஷாபல் என்ற இடத்தில் உள்ள சிறையில் உள்ள கைதிகளை தப்ப வைக்கும் பொருட்டு வெளியில் இருந்து சில கிளர்ச்சியாளர்கள் சிறை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். முதலில் வெடிகுண்டு வைத்து சிறையின் சுவர் தகர்க்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறையின் உள்ளே நுழைந்து சிறை காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பதிலுக்கு சிறைக்காவலர்களும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 19 சிறைக்கைதிகள் மற்றும் 1 சிறைக்காவலர் உயிரிழந்தனர். மேலும் 4 காவலர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

பிரேசில் நாட்டில் சுமார் 7,26,000 கைதிகள் உள்ளனர். அதிகளவில் கைதிகள் இருப்பதால் அவர்களை மீட்கும் பொருட்டு இதுபோன்ற தாக்குதல்கள் அங்கு தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு இதே போன்று நடந்த ஒரு தாக்குதலில் 125 கைதிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP