'கஷோகி படுகொலைக்கு இளவரசர் தான்பொறுப்பு' - விசாரணையை தொடங்கியது அமெரிக்கா 

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை சம்பந்தமாக, துருக்கியில் தனது விசாரணையை அமெரிக்கா நேரடியாக தொடங்கியுள்ளது. அத்துடன் இந்த விவகாரத்தில் சவுதி இளவரசருக்கு முழு பொறுப்பு உள்ளது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
 | 

'கஷோகி படுகொலைக்கு இளவரசர் தான்பொறுப்பு' - விசாரணையை தொடங்கியது அமெரிக்கா 

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை சம்பந்தமாக, துருக்கியில் தனது விசாரணையை அமெரிக்கா நேரடியாக தொடங்கியுள்ளது. அத்துடன் இந்த விவகாரத்தில் சவுதி இளவரசருக்கு முழு பொறுப்பு உள்ளது எனவும் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். 

பத்திரிகையாளர் கஷோகி படுகொலை குறித்து வந்த அதிர்ச்சி தகவல்களுக்கு மவுனம் சாதித்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இது குறித்து, தற்போது கருத்து கூறியுள்ளார். அதில், "சவுதி அரேபியாவின் தகவல்கள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், ஜமால் கஷோகி படுகொலையில் சதி உள்ளதாகவும்" கூறினார். 

''கசோக்கி படுகொலையில் நடந்தது என்ன என்பது நமக்கு விரைவில் தெரிய வந்துவிடும். திறமை வாய்ந்த நபர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தக் கொலையில் தனக்கோ, மன்னருக்கோ நேரடியாகத் தொடர்பு இல்லை என சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் என்னிடம் தெரிவித்தார். ஆனால் இதில் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டால், அது குறித்து நான் மிகவும் வருத்தம் அடைய நேரிடும்" என்று குறிப்பிட்டார்.

இதனிடையே கஷோகி படுகொலை தொடர்பான விசாரணைக்காக அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின். இயக்குனர் ஜினா காஸ்பெல் துருக்கி சென்றுள்ளார். அங்கு அவர் நேரடியாக விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை அமெரிக்க அரசுக்கு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கஷோகி படுகொலையின் பின்னணியை  வெளி வரும் எனத் தெரியவந்துள்ளது.

சி.ஐ.ஏ. விசாரணை குறித்த தகவல் வெளியான நிலையில் சவுதி இளவரசர் பின் சல்மான், ''மோசமான ஒரு சம்பவத்தை நியாயப்படுத்திவிட முடியாது'' என்று தெரிவித்திருப்பதாக சவுதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த மாத துவக்கத்தில், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மாயமானார். சவுதி அரச குடும்பத்துக்கு எதிராக எழுதி வந்த அவரை, சவுதி அதிகாரிகள் சேர்ந்து தூதரகத்திலேயே வைத்து சித்தரவதை செய்து, கொலை செய்ததாகவும், அவர் உடலை துண்டு துண்டாக வெட்டி அமிலத்தில் கரைத்ததாகவும் கூறப்படுகிறது. துருக்கி அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி 18 பேரை கைது செய்துள்ளனர். சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடிக்கு பின், தூதரகத்துக்குள் நடந்த ஒரு சண்டையில் கஷோகி பலியானதாக சவுதி அரசு தெரிவித்திருந்தது.

தொடர்புடையவை: 

 

'தலைதுண்டித்து பத்திரிகையாளர் படுகொலை' - சரிகட்ட அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாய்!

கஷோகி படுகொலை குறித்து மன்னருக்கு தெரியாது: சவுதி வெளியுறவு அமைச்சர்

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP