அதிபர் ட்ரம்ப்பின் வழக்கறிஞருக்கு 3 ஆண்டுகள் சிறை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், நாடாளுமன்றத்தில் பொய் சொன்னது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
 | 

அதிபர் ட்ரம்ப்பின் வழக்கறிஞருக்கு 3 ஆண்டுகள் சிறை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், நாடாளுமன்றத்தில் பொய் சொன்னது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

அதிபர் ட்ரம்ப்புடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்களுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுத்து அவர்கள் வாயை அடைத்த விவகாரத்தில் ட்ரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மீது குற்றச்சாட்டப்பட்டது. தேர்தல் நேரத்தின் போது,  ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக நடைபெறும் எந்த செயலையும், அரசிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப் தொடர்பான உண்மைகள் வெளியில் தெரியாமல் மறைக்க மைக்கேல் கோஹன் சட்டவிரோதமாக உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மைக்கேல் கோஹனை நாடாளுமன்றத்தில் அழைத்து விசாரித்த போது, அவர் அங்கு உண்மையை மறைத்தார்.

மேலும், வெளிநாட்டில் இருந்து தனக்கு வந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை அரசிடம் தெரிவிக்காமல் மறைத்த விவாகரத்தில் அவர் மீது குற்றம் சட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில், கோஹன் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபணமானது. ரஷ்யாவுடன் அதிபர் ட்ரம்ப்புக்கு இருக்கும் ரகசிய தொடர்பு குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணை கமிஷன், மைக்கேல் கோஹனிடம் நடத்திய விசாரணையில் அவர், அப்ரூவராக மாறினார். அவரின் வாக்குமூலம், ட்ரம்ப் தொடர்பான விசாரணையில், உதவியாக இருந்துள்ளதால், மைக்கேல் கோஹனுக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என சிறப்பு கமிஷன் வலியுறுத்தியிருந்தது. 

இதைத் தொடர்ந்து, நேற்று, கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP