டிவி சேனலுக்கு போன் செய்து அரை மணிநேரம் புலம்பிய அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு போன் செய்து, சுமார் அரைமணி நேரம் புலம்பியது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

டிவி சேனலுக்கு போன் செய்து அரை மணிநேரம் புலம்பிய அதிபர் ட்ரம்ப்!

டிவி சேனலுக்கு போன் செய்து அரை மணிநேரம் புலம்பிய அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு போன் செய்து, சுமார் அரைமணி நேரம் புலம்பியது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பல்வேறு விவகாரங்களில் சிக்கி, தொடர் ஊடக வெளிச்சத்தில் உள்ளார் அதிபர் ட்ரம்ப். சில வருடங்களுக்கு முன், ஆபாச நடிகையுடன் அவருக்கு தொடர்பு இருந்த விஷயம் சமீபத்தில் அம்பலமானது. தேர்தலின் போது, அந்த நடிகை ட்ரம்ப்புடனான உறவு குறித்து பேசிவிடக் கூடாது என்பதற்காக, அவருக்கு சுமார் 90 லட்ச ரூபாயை ட்ரம்ப்பின் தனிப்பட்ட விவகாரங்களை பார்த்துக் கொள்ளும் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் வழங்கி 'பேச்சுத்தடை' ஒப்பந்தம் போட்டார்.

தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாக இது பார்க்கப்பட்டதால், கோஹன் மீது தனி விசாரணை துவக்கப்பட்டது. ஏற்கனவே ட்ரம்ப் தேர்தலில் வெல்ல ரஷ்ய உளவாளிகள் உதவிய விவகாரத்தின் சிறப்பு விசாரணை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  பல சட்டவிரோத செயல்களை செய்து வந்ததாக கோஹன் மீதான விசாரணை வளையம் பெரிதானது. கோஹன் வீட்டில் அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ அதிரடி ரெய்டு நடத்தியது. லட்சக்கணக்கான ஆவணங்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் உள்ள பலவற்றால், ட்ரம்ப்பின் பதவிக்கே ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 

நீதிமன்றத்தில் அந்த ஆவணங்களை தங்களுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என ட்ரம்ப் தரப்பு வாதிட்ட நிலையில், நீதிபதி அதை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், ட்ரம்ப் தொழிலதிபராக இருந்த போது பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், அப்ரூவராக மாறவுள்ள  வழக்கறிஞர் கோஹன், அதையெல்லாம், அதிகாரிகளிடம் சொல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த விவகாரங்களால் கடும் கோபத்தில் உள்ள அதிபர் ட்ரம்ப், ட்விட்டரில் அடிக்கடி தன்னை விசாரிக்கும் எஃப்.பி.ஐ, சிறப்பு விசாரணை கமிஷன் ஆகியோரை விமர்சனம் செய்து வருகிறார். 

ஃபாக்ஸ் நியூஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம், ட்ரம்ப்புக்கு மிகவும் நெருக்கமானதாக பார்க்கப்படுகிறது. அந்த தொலைக்காட்சியில் பணிபுரியும் பல தொகுப்பாளர்கள், ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர்களாவார்கள். முக்கியமாக ஃபாக்ஸ் ஆண்ட் ஃப்ரண்ட்ஸ் என்ற நிகழ்ச்சி ட்ரம்ப்பின் ஃபேவரைட் நிகழ்ச்சியாம். தினமும் காலை அதை பார்த்து அதில் வரும் செய்திகளை ட்ரம்ப் ட்வீட் செய்வார். தனது ஆலோசகர்கள் சொல்லும் கருத்துக்களை விட, அந்த நிகழ்ச்சியில் கூறும் கருத்துக்களையே ட்ரம்ப் நம்புவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

தற்போது பல சர்ச்சைகளுக்கு நடுவே உள்ள அவர், நேற்று காலை அந்த நிகழ்ச்சிக்கு போன் செய்துள்ளார். சுமார் அரைமணிநேரம் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனக்கு எதிராக எல்லோரும் சதி செய்து வருவதாக புலம்பினார். தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், பல விஷயங்களை பற்றி மாறி மாறி பேசினார் ட்ரம்ப். அதிபர் பேசும்போது, குறுக்கிட முடியாமல், மறுத்து பேசவும் முடியாமல் அந்த தொகுப்பாளர்கள் தடுமாறிய காட்சிகள் தற்போது மீம்ஸாக மாறியுள்ளது. ஒரு வழியாக அரைமணி நேரத்திற்கு பிறகு, "தங்களிடம் போதுமான நேரம் இல்லை" என கூறி ட்ரம்ப்பை தொகுப்பாளர்கள் 'கட்' செய்தனர்.

பல அமெரிக்க காமெடி நிகழ்ச்சிகள் ட்ரம்ப்பின் புலம்பல்களை வைத்து கலாய்த்து வருகின்றனர். ட்ரம்பின் ஆதரவாளர்களே இதை பார்த்து கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP