அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தெற்கு கெனாய் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, சிறிது நேரம் கழித்து திரும்ப பெறப்பட்டது.
 | 

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் பெருநகரமான அலாஸ்காவில் இன்று காலை 6.7 என்ற ரிக்டர் அளவு கோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அலாஸ்காவிலிருந்து வடக்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆன்சோரேஞ்ச் என்னுமிடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க உள்துறை செயலாளர் ரியான் ஷின்கே, இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சாலைகள், பாலங்கள் மற்றும் தண்ணீர் குழாய்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக கூறியுள்ளார். 

மேலும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலாஸ்காவிலுள்ள தெற்கு கெனாய் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, சிறிது நேரம் கழித்து திரும்ப பெறப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP